குதுப் நினைவுச்சின்னங்கள்

கோபுரம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

குதுப் மினார் (குத்ப் அல்லது குத்துப் என்றும் உச்சரிக்கப்படுகிறது, உருது : قطب منار ), இந்தியாவில், தில்லியில் 72.5 மீட்டர்கள் (237.8 அடி) உயரம் கொண்ட கோபுரமாகும். உலகிலேயே, செங்கல்லால் செய்த உயர்ந்த பள்ளி வாயில் தூபி இதுவே ஆகும். இந்தியாவின் முதல் இசுலாமிய அரசரான குத்புத்தீன் ஐபக் ஆணையின் படி, இந்தத் தூபியின் கட்டிடப்பணி 1193 ஆம் ஆண்டில் ஆரம்பித்தது, 1386 ஆம் ஆண்டில் பிரூசு சா துக்ளக் மேற்பார்வையில் கட்டிமுடிக்கப்பெற்றது. குதுப் மினார் என்பது இந்திய-இசுலாமிய கட்டிடக்கலைக்கு மிகவும் பழமையான எடுத்துக்காட்டாக பெயர் பெற்றதாகும்.[3] இந்தோ-இஸ்லாமிய கட்டிடக்கலைக்கு அதன் தொடக்க மற்றும் மிகவும் புகழ் பெற்ற எடுத்துக்காட்டுகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாக குதுப் மினார் திகழ்கின்றது.

விரைவான உண்மைகள் Qutb Minar, ஆள்கூற்றுகள் ...

இது பிற பல்வேறுபட்ட பழமையான, இடைக்கால கட்டமைப்புகள் மற்றும் இடிபாடுகளால் சூழ்ந்திருப்பதால், இது, குதுப் பல்கூட்டுத் தொகுதி-வளாகம் என்று அறியப்படுகிறது. இந்த வளாகம் யுனெசுக்கோ அமைப்பால் உலகப் பாரம்பரியக் களம் என வழங்கப்படுவதாகும். தில்லியில் மிகவும் பிரபலமான சுற்றுலாப் பயணிகள் விரும்பிப் பார்க்கும் இடமாக இந்த இடம் திகழ்கிறது. மேலும் 2006 ஆம் ஆண்டில் மிகவும் அதிகமான எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வந்த தளமாகும். அந்த ஆண்டில் 3.9 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் குத்துப் மினாரைக் கண்டு களித்தனர். மேலும் தாஜ் மகாலைப் பார்க்க குறைவாக சுமார் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் மட்டுமே வந்தனர்.[4]

Remove ads

கட்டமைப்பு

குதுப் மினாரின் உச்சி வரை சென்றடைய 378 படிகள் ஏற வேண்டும். அடித்தளத்தின் குறுக்கு விட்டம் 14.3 மீட்டர்களாகும், மேல் தளம் 2.75 மீட்டர்கள் குறுக்கு விட்டம் கொண்டதாகும். கோபுரம் ஒன்று குதுப் மினாரைவிட உயரம் கொண்டதாக திட்டமிட்டு கட்டுமானத்தில் இருந்தது. அது பன்னிரண்டு மீட்டர்கள் உயர்ந்த பொழுது திடீரென கட்டுமானப்பணிகள் பாதியிலேயே நின்றுவிட்டது. மேலும் அருகாமையில் நடந்த ஆய்வுகளின்படி இதன் கட்டமைப்பு ஒரு திசையில் சற்றே சரிந்து இருப்பதாக காணப்படுகிறது. மேலுச்சியில் இரண்டு அடுக்குகள் நீங்கலாக இதன் பிற இடங்களில், குறிப்பாக மக்கள் செல்லும் வழி அனைத்தும் சிவப்பு வண்ணம் கொண்ட மணல்கற்களால் கட்டியதாகும். இப்பகுதி வரையில் மட்டும் வெள்ளை சலவை கற்களால் ஃபிருஸ் ஷா துக்ளக் வம்ச அரசரால் கட்டப்பெற்றது. கம்பீரமான மினாருக்கு இறுதியாக ஒரு சிறப்பான முக்கியத்துவம் தர வேண்டும் என அவர் தீர்மானித்ததே இதற்கான காரணமாகும்.

Remove ads

வரலாறு

Thumb
72.5 மீ (234 அடி) உயரமுடைய குதுப் மினார் தான் உலகின் உயரமான தங்கு தடையில்லாமல் நிற்கின்ற தூபி

ஆப்கானிஸ்தான் நாட்டில் காணப்படும் ஜாம் மினார் எனும் கட்டிடத்தை விட உயரமாகவும் பெயர் பெற்றிடும் நோக்கத்துடன் தில்லியின் முதல் இஸ்லாமிய அரசரான குத்புத்தீன் ஐபக், 1193 ஆம் ஆண்டு குதுப் மினார் என்ற இந்த கோபுரத்தின் கட்டிட வேலைகளை ஆரம்பித்தார். ஆனால் அவரால் அதன் அடித்தளத்தை மட்டுமே கட்ட முடிந்தது. அவரை பின்தொடர்ந்த, இல்த்துத்மிசு என்ற அரசர் மேலும் மூன்று தளங்களைக் கட்டி முடித்தார். 1286 ஆம் ஆண்டில், அலாவுதீன் என்ற அரசரின் கீழ் ஐந்தாவது மற்றும் கடைசி தளம் கட்டி முடிந்தது. ஐபக் முதல் துக்ளக் வரையான காலகட்டத்தில் கட்டிடக்கலையில் ஏற்பட்ட நடைமுறை மாற்றங்களை அந்த தூபியில் தெளிவாகக் காணலாம். ஆப்கானிஸ்தான் நாட்டில் இதற்கு முன் கசினி மற்றும் கோரி வம்சம் வம்சத்தினர் கட்டிய கோபுரங்களைப் போல, இந்த குதுப் மினாரும் பல ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கிய பட்டையான விளிம்புடன் கூடிய உருளை வடிவான அம்புகள் கொண்டு வடிவமைக்கப் பெற்றது. மேலும் தனிப்பட்ட முகாமா வகை தண்டயங்களைக் கொண்டு உப்பரிகைகள் உருவாக்கப்பெற்றன. இந்த தூபி சிவந்த வரை மணற்கல்லால் கட்டியது மேலும் அதன் மேல் குர்ஆனில் இருந்து கவிதைகள் மற்றும் அழகிய வேலைப்பாடுகள் செதுக்கப் பெற்றது. தில்லி நகரத்தை தலைநகரமாகக் கொண்டு கடைசியாக ஆண்ட இந்துக்கள் வம்சத்தை சார்ந்த தொமர்கள் மற்றும் சௌஹன்கள் வாழ்ந்து அழிந்த செங்கோட்டை என்ற இடத்தின் இடிபாடுகளில் தான் இந்த குதுப் மினார் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் அதற்கு முன் 27 மிகப் புராதனமான இந்து மற்றும் ஜைன மதத்தினரின் கோவில்கள் நிலை கொண்டிருந்தன, அவற்றை அழித்து அதில் எஞ்சிய பொருட்களைக் கொண்டு இந்த குதுப் மினார் நிறுவப்பெற்றது. குதுப் மினாரில் உள்ள ஒரு செதுக்கு கலைத்திறன் வேலைப்பாட்டில் "ஸ்ரீ விஸ்வகர்மா பிரசாதே ரக்ஷித" என்ற வாசகம் உள்ளது; அதன் மூலமாக விசுவகர்மாவின் இறையாசி பெற வேண்டும் என்பதற்காக ஓர் அடிமை இந்துக் கைவினைஞர் கட்டிடப்பணியில் இருந்த வேளையில் இதை செதுக்கி இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.[5]

இந்த கோபுரம் எதற்காக கட்டினார்கள் என்பதைப் பற்றி பரவலாக விவாதங்கள் நடைபெற்றுள்ளன. டெல்லி சுல்தான்கள் காலத்தில் விஸ்தரிக்கப்பட்ட மசூதி குவ்வட்-உல்-இஸ்லாம் போல, மக்களை தொழுகைக்காக அழைக்கவே, பள்ளி வாயில் தூபி தனது பங்கை வழக்கமாக செய்ய வேண்டி கட்டி இருக்கலாம். வெற்றிவாகை சூடியதைக் கொண்டாட இவ்வாறு கோபுரத்தை எழுப்பி இருக்கலாம், இது இஸ்லாம் மதத்தினரின் படை பலத்தை குறிப்பதாக அமையலாம் அல்லது பாதுகாப்பிற்காக ஏற்படுத்திய காவல் கோபுரமாகவும் இருக்கலாம். இதற்கு யார் பெயர் வைத்தார்கள் மற்றும் அப்படி ஏன் வைத்தார்கள் என்பது பற்றியும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. பல வரலாற்று வல்லுனர்கள் முதலில் இந்தியாவுக்கு வந்து வெற்றி கண்ட துருக்கிய சுல்தான் குத்புத்தீன் ஐபக் அவர்களின் நினைவை போற்றும் வகையில் இந்தப் பெயர் சூட்டியாதாகக் கூறினாலும்,[5] சிலர் திரான்ஸ்ஓக்சியானா என்ற இடத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்த ஒரு துறவி குத்துபுத்தின் பக்தியார் காக்கி[6] என்பவரை போற்றும் வகையில் சூட்டப் பெற்றதாக கூறுகிறார்கள், இல்துமிஷ் என்ற அரசரும் அவரை மிகவும் போற்றி வணங்கியதாக கூறுகிறார்கள்.

இந்த வளாகத்தின் அருகாமையில் நிற்கும் தில்லி இரும்புத் தூண் உலக அதிசயங்களில் ஒன்றாகும், உலோக ஆக்கத் தொழில் வல்லுனர்கள் மிகவும் ஆச்சரியம் அடைந்த விஷயமாகும். பரம்பரை பரம்பரையாக மக்கள் நம்புவது என்ன என்றால், ஒருவர் முதுகை இந்த தூணுடன் இணைத்து, தமது கரங்களால் இந்த தூணை அரவணைக்க முடிந்தால், அவர்கள் நினைப்பது நடக்கும் என்பது ஐதீகமாகும். மனிதனின் வியர்வை இந்த தூணை அரித்தழிக்கும் என்பதால் இப்படி செய்யாமல் இருக்க, இந்திய அரசு இந்தத் தூணை சுற்றி ஒரு பாதுகாப்பு வேலியை அமைத்துள்ளது.

இருமுறைக்கும் மேலாக நிகழ்ந்த நிலநடுக்கங்களால் மினார் கொஞ்சம் சீரழிந்தது, ஆனாலும் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் இதை புதுப்பித்து பழைய நிலைக்குக் கொண்டுவந்தனர். பிரோஜ் ஷா அரசனாக இருந்த பொழுது, இதன் இரு மேல் மாடிகள் பூமி குலுக்கம் காரணம் பழுதடைந்தன, ஆனால் அரசர் பிரோஜ் ஷா அதை அப்போதே சரிகட்டிவிட்டார். 1505 ஆம் ஆண்டில், நிலநடுக்கம் மீண்டும் தாக்கியது மற்றும் சிகந்தர் லோடி அதை மீண்டும் பழுது பார்த்தார். பிறகு 1794 ஆம் ஆண்டில் ஒரு முறை பூமி குலுக்கத்திற்கு இந்த கோபுரம் ஆளான பொழுது, மேஜர் ஸ்மித் என்ற பொறியியலாளர் அதன் பழுதடைந்த பாகங்களைச் சரி செய்தார். அவர் கோபுரத்தின் சிகரத்தில் பிரூசு சா அமைத்த காட்சிக்கூடத்தை மாற்றி அமைத்தார். இந்தக் காட்சிக் கூடத்தை 1848 ஆம் ஆண்டில் ஆர்டிங் பிரபு என்பவர் பிரித்தெடுத்து, தபால் கட்டிடம் மற்றும் கோபுரத்திற்கு இடையில் அமைந்த தோட்டத்தில் மாற்றியமைத்தார். பிரூசு சா அமைத்த தளங்களை எளிதாக கண்டு கொள்ளலாம். ஏன் என்றால் அவர் தரைகளை வெள்ளை நிறப் பளிங்குக் கற்களால் உருவாக்கினார். அவை மினுமினுப்பாகவும் வழவழப்பாகவும் இருப்பது பார்த்தாலே தெரிந்து விடும்.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads