குமிஸ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குமிஸ் (kumis, (காசாக்கு: қымыз) என்பது பாரம்பரியமாக குதிரை பாலில் இருந்து தயாரிக்கப்படும் நொதிக்க வைக்கப்பட்ட பால்பொருளாகும். ஹுனோ-பல்கேர், துருக்கிய மற்றும் மங்கோலிய இனங்களிலிருந்து தோன்றிய (கசக்குகள், பஷ்கிர்கள், கல்மிக்குகள், கிர்கிசுகள், மங்கோலியர்கள், மற்றும் யகுட்கள்) நடு ஆசிய ஸ்டெப்பி புல்வெளிகளை பூர்வீகமாகக் கொண்ட மக்களுக்கு இந்த பானமானது இன்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.[1]
குமிஸ் என்பது கெஃபிர் எனப்படும் பால் பொருளை ஒத்ததாகும். ஆனால் குமிஸ் திரவ பொருட்களை கொண்டு உருவாக்கப்படுகிறது. அதேநேரத்தில் கெஃபிர் திடப் பொருட்களையும் சேர்த்து உருவாக்கப்படுகிறது. குதிரையின் பாலானது மாடு மற்றும் ஆட்டின் பாலை விட அதிக அளவு சர்க்கரையை கொண்டுள்ளது. இதன் காரணமாக நொதிக்க வைக்கப்படும்போது குமிஸ் ஒப்பீட்டளவில் கெஃபிரைவிட அதிக அளவுக்கு மதுவைக் கொண்டுள்ளது.
Remove ads
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads