கசக்குகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கசக்குகள் என்பவர்கள் மத்திய ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவை பூர்வீகமாகக் கொண்ட ஓர் துருக்கிய இனக்குழுவினர் ஆவர். இவர்கள் பெரும்பாலும் கசக்கஸ்தானில் வசிக்கின்றனர். இவர்கள் மேலும் வடக்கு உசுபெக்கிசுத்தானின் சில பகுதிகள் மற்றும் உருசியாவின் எல்லைப் பகுதிகள், அத்துடன் வடமேற்கு சீனா (குறிப்பாக இலி கசாக் தன்னாட்சி மாகாணம்) மற்றும் மேற்கு மங்கோலியா (பயான்-உல்கி மாகாணம்) உள்ளிட்ட பல நாடுகளிலும் காணப்படுகிறார்கள். இவர்கள் சீன மக்கள் குடியரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 56 இனக்குழுக்களில் ஓர் இனக்குழுவினர் ஆவர். பதினைந்தாம் நூற்றாண்டில் துருக்கிய மற்றும் மங்கோலிய வம்சாவளியைச் சேர்ந்த பழங்குடியினரின் இணைப்பில் இருந்து கசக்குகள் உருவாயினர்.[20][21][22][23][24][25]
கசக்குகளுக்கென ஓர் தனி அடையாளம் பெரும்பாலும் 1456 மற்றும் 1465 க்கு இடையில் கசக் கானரசு ஆட்சியின் போது உருவாக்கப்பட்டது. தங்க நாடோடிக் கூட்டம் பிரிந்ததை தொடர்ந்து, சானிபெக் மற்றும் கெரே அரசர்களின் ஆட்சியின் கீழ் பல பழங்குடியினர் அபுல்-கானரசிலிருந்து வெளியேறி கசக் கானரசை உருவாக்கினர்.
கசக் என்ற சொல் கசாக் இனத்தவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது, அதே சமயம் கசகஸ்தானி என்ற சொல் இன வேறுபாடின்றி கசகஸ்தானின் அனைத்து குடிமக்களையும் குறிக்கிறது.[26][27]
Remove ads
சொற்பிறப்பியல்
வரலாற்றின் அடிப்படையில், கசக் மக்கள் பதினைந்தாம் நூற்றாண்டில் கசக் என்ற பெயரைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கலாம். கசக் என்ற வார்த்தையின் தோற்றம் குறித்து பல கோட்பாடுகள் உள்ளன. இது துருக்கிய வினைச்சொல்லான கஸ் (அலைந்து திரிபவர், கொள்ளையடிப்பவர், போர்வீரர், சுதந்திரமானவர் என பல அர்த்தங்கள் கொண்டது) என்பதிலிருந்து வந்தது என்று சிலர் ஊகிக்கிறார்கள். மேலம் சிலர் இது துருக்கிய வார்த்தையான கசாக் என்பதிலிருந்து பெறப்பட்டதாக கருதுகின்றனர். கசாக் என்பது யூர்ட்கள் மற்றும் பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் ஒரு சக்கர வண்டியாகும். கசக் என்ற வார்த்தையின் தோற்றம் பற்றிய மற்றொரு கோட்பாடு இது பண்டைய துருக்கிய வார்த்தையான கசகக் என்பதிலிருந்து வந்தது எனக் கூறுகிறது. இது எட்டாம் நூற்றாண்டின் துருக்கிய நினைவுச்சின்னமான உயுக்-துரானில் குறிப்பிடப்பட்டுள்ளது.[28]
Remove ads
வரலாறு
பண்டைய வரலாற்றில் கசகசுதான் பல நாடோடி சமூகங்களின் பிறப்பிடம் மற்றும் தாயகமாக இருந்தது. தங்க நாடோடிக் கூட்டம் பிரிந்ததை தொடர்ந்து, சானிபெக் மற்றும் கெரே அரசர்களின் ஆட்சியின் கீழ் பல பழங்குடியினர் அபுல்-கானரசிலிருந்து வெளியேறி கசக் கானரசை உருவாக்கினர். 1456 மற்றும் 1465 க்கு இடையில் கசக் கானரசு ஆட்சி உருவாக்கப்பட்டது.[29]
துருக்கிய மக்களின் தோற்றம் பற்றிய தகவல்கள் தெளிவாக இல்லை. அவர்களின் தாயகம் தெற்கு சைபீரியாவில் அல்லது மங்கோலியாவில் இருந்திருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. மத்திய ஆசியாவில் குடியேறிய ஆரம்பகால துருக்கிய மக்கள் பண்டைய வடகிழக்கு ஆசியர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டனர்.[30][31] பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வடக்கு மத்திய ஆசியாவின் துருக்கிய மொழி பேசும் ஆயர் நாடோடி குழுக்களின் கூட்டமைப்பிலிருந்து கசக் இன மொழியியல் குழு உருவானது. கசக் மக்கள் வடக்கு மத்திய ஆசியா மற்றும் தெற்கு சைபீரியாவில் ஒரு பெரிய நிலப்பரப்பில் வாழ்கின்றனர்.[32]

Remove ads
மொழி
கசக் மக்கள் பேசும் பெரும்பான்மை மொழியான கசக் மொழி துருக்கிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது.[33]
கலாச்சாரம்
பாரம்பரிய கசக் உணவுகள் ஆடு மற்றும் குதிரை இறைச்சி மற்றும் பல்வேறு பால் பொருட்கள் ஆகியவற்றைச் பயன்படுத்துகின்றன. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக, கசக் மக்கள் செம்மறி ஆடுகள், பாக்டிரியன் ஒட்டகங்கள் மற்றும் குதிரைகளை வளர்த்து, போக்குவரத்து, உடை மற்றும் உணவுக்காக இந்த விலங்குகளை பயன்படுத்தினர். பெரும்பாலான கசக் சமையல் நுட்பங்கள் உணவை நீண்டகாலம் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
பாரம்பரிய கசக் ஆடைகள் பெரும்பாலும் பிராந்தியத்தின் தீவிர காலநிலை மற்றும் கிராமப்புற நாடோடி வாழ்க்கை முறைக்கு ஏற்ற பொருட்களால் செய்யப்படுகின்றன.[34] இது பொதுவாக பறவைக் அலகுகள், விலங்குகளின் கொம்புகள், குளம்புகள் மற்றும் கால்களால் செய்யப்பட்ட விரிவான ஆபரணங்களால் அலங்கரிக்கப்படுகிறது.[35] சமகால கசக் மக்கள் பொதுவாக மேற்கத்திய ஆடைகளை அணிந்தாலும், அவர்கள் விடுமுறை மற்றும் சிறப்பு சந்தர்ப்பங்களுக்கு பாரம்பரிய ஆடைகளை அணிவார்கள்.[36]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads