கும்பகோணம் சோமேசர் கோயில்
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கும்பகோணம் சோமேசர் கோயில் என்பது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 28ஆவது சிவத்தலமாகும்.
Remove ads
அமைவிடம்
இத்தலம் தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இந்த ஊரானது திருக்குடந்தைக்காரோணம் என்றும், குடமூக்கு என்றும், குடந்தை என்றும் பழங்காலத்தில் வழங்கப்பட்டுள்ளது. இக்கோயில் பொற்றாமரைக் கீழ்க்கரையில் உள்ளது.
வரலாறு
அமுத கும்பத்திற்கு ஆதாரமாயிருந்த சிக்கத்தில் (உறி) இருந்து தோன்றியவர். இதனால் சிக்கேசம் என்றும், பெருமானுக்கு சிக்கேசர் என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. சந்திரனுக்கு அருள் செய்ததால் சோமேசுவரர் என்றும், ஏழை சோமநாதர் என்றும், தேவிக்கு சோமசுந்தரி என்றும் பெயர்கள் அமைந்துள்ளன. வியாழன் வழிபட்டதால் வியாழசோமேசர் என்ற பெயரும் உள்ளது. தீர்த்தம் : சோம தீர்த்தம், சந்திர புட்கரணி தீர்த்தம். இக்கோயிலில் நவராத்திரி சிறப்பாக நடைபெற்று வருகிறது.[1]
Remove ads
இறைவன், இறைவி
சோமேஸ்வரர், தாயார் தேனார் மொழியாள்.
குடமுழுக்கு
2009இல் இக்கோயிலின் குடமுழுக்கு நடைபெற்றது. மகாமகத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் பெரும்பாலான கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில் இக்கோயிலில் நவம்பர் 2, 2015இல் குடமுழுக்கு நடைபெற்றது.[2][3] 29 ஜனவரி 2016 அன்று கோயிலில் கொடி மரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.[4]
மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்க
நவம்பர் 2, 2015 குடமுழுக்கு படத்தொகுப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads