குருசடை தீவு

மக்கள் வாழாத தமிழகத் தீவு From Wikipedia, the free encyclopedia

குருசடை தீவுmap
Remove ads

குருசடை தீவு (Krusadai Island) என்பது தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தின் மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள ஓர் தீவு. இத்தீவானது மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்காவின் ஒரு பகுதியாக தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வனத் துறையினரின் அனுமதி இன்றி இங்கு யாரும் செல்லக்கூடாது.

விரைவான உண்மைகள் புவியியல், ஆள்கூறுகள் ...
Thumb
பாம்பன் தீவும் அதன் அருகில் குருசடை தீவும்
Thumb
மன்னார் வளைகுடாவில் உள்ள தீவுகள் குறித்து குருசடை தீவில் வைக்கப்பட்டுள்ள வரைபடம்
Thumb
படகில் செல்லும்போது காணும் குருசடை தீவின் தோற்றம்
Remove ads

அமைவு

பாம்பன் பாலத்தின் மேற்குக் கரைக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையில் உள்ள ஓர் அழகிய தீவு ஆகும். இது பாம்பனில் இருந்து நான்கு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

பார்வை

இத்தீவானது ஏறக்குறைய 150 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகவும், 4.5 கி.மீ சுற்றளவு கொண்டதாகவும் உள்ளது. பவளப் பாறைகளும், ஓங்கில் (டால்பின்), ஆவுளியா (கடல் பசு) போன்ற அரியவகை உயிரினங்களும் உள்ளன. தீவில் அரியவகைத் தாவரங்கள் காணப்படுகின்றன. இது உயிரியல் ஆய்வாளர்களுக்கு ஓர் பிடித்தமான தீவு ஆகும். இத்தீவு மண்டபத்தில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[1]ஆங்கிலேயர் காலத்தில் கடல்வாழ் உயிரின ஆராய்ச்சிக் கூடமும், உயிரியல் காட்சிக்கூடமும், ஒரு சிறு விடுதியும், முத்துச் சிப்பி வளர்ப்பு நிலையமும் இருந்தன.[2] அந்தக் கட்டடங்கள் இன்றும் காணப்படுகின்றன.

Remove ads

சூழலியல் சுற்றுலா

இத்தீவை சுற்றிப் பார்க்க தமிழ்நாடு வனத்துறையால் சூழலியல் சுற்றுலா நடத்தப்படுகிறது. பாம்பன் தீவில் உள்ள குந்துக்கால் கடற்கரையில் உள்ள படகு இறங்கு தளத்தில் இருந்து படகின் மூலம் குருசடைத் தீவுக்கு சுற்றுலாப் பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டு, தீவை சுற்றிக் காட்டுகின்றனர். தீவுக்கு நாள்தோறும் காலை ஏழு மணியில் இருந்து மதியம் இரண்டு மணிவரை படகுகள் இயக்கப்படுகின்றன.[3]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads