குரு (திரைப்படம்)
மணிரத்னம் இயக்கிய 2007 திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
குரு (Guru) (இந்தி: गुरू ) 2007 ஆண்டில் வெளிவந்த இந்தியினை மூலமாகக் கொண்டு தமிழிலும், தெலுங்கிலும் குரல்மாற்றம் செய்யப்பட்டு வெளிவந்த திரைப்படமாகும். இதன் இயக்குநர் மணிரத்தினம் ஆவார். மிதுன் சக்கரவர்த்தி, அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், வித்யா பாலன், மாதவன் ஆகியோர் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர். தமிழில் வசனம் அழகப் பெருமான், பாடல்கள் வைரமுத்து.
Remove ads
நடிகர்கள்
- மிதுன் சக்கரவர்த்தி - நானாஜி
- அபிஷேக் பச்சன் - குருநாத் தேசிகன்
- ஐஸ்வர்யா ராய் - சுஜாதா
- மாதவன் - சியாம் சரவணன்
- வித்யா பாலன் - மீனாட்சி
- மல்லிகா ஷெராவத் - சிறப்புத் தோற்றம்
- ரோஷன் சேத்... நீதியரசர் தபார் (அரசுப் புலனாய்வு குழுவின் தலைவர்)[1]
பாடல்கள்
- "வெண்மேகம்" - சிரேயா கௌசல் & உதேய் மசும்தர்) - 5:29
- "ஆருயிரே மன்னிப்பாயா" -A. R. ரஹ்மான்,முர்தாஷா,குவாதீர் & சின்மயி - 5:10
- "ஜோடி ஜோடி" - பாலசுப்பிரமணியம், சித்ரா - 4:58
- "மையா மையா - மரியம் டோலர்,சின்மயி & கீர்த்தி - 6:02
- "ஏ மாண்புறு மங்கையே" ஸ்ரீநிவாஸ் & சுஜாதா - 6:09
- "பைசா பைசா" - கார்த்திக்,மதுஸ்ரீ - 4:59
- "ஒரே கனா" - சித்ரா, ஏ.ஆர்.ரகுமான் & கோரஸ் - 6:33
வெண்மேகம் பாடல்
மணிரத்னம் இயக்கத்தில் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமான குருவில் இடம்பெற்ற பாடலே வெண்மேகம். இப்பாடலின் வரிகளை வைரமுத்து எழுத, ஏ. ஆர். ரகுமான் இசையில் சிரேயா கோசல் மற்றும் உதய் மசும்தர் பாடினார்கள்.
இந்தி பதிப்பில்
இப்படத்தின் இந்தி பதிப்பில், இப்பாடலை சிரேயா கௌசல் மற்றும் உதேய் மசும்தர் பாடினார்கள். பர்சோ ரே என்று தொடங்கிய பாடலை குல்சார் எழுதினர்.
ஆருயிரே மன்னிப்பாயா பாடல்
மணிரத்னம் அவர்கள் இயக்கத்தில் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளிவந்த தமிழ் படமான குரு படத்தில் இடம்பெற்ற பாடலே ஆருயிரே மன்னிப்பாயா. இப்பாடலின் வரிகளை வைரமுத்து எழுத ,ஏ.ஆர்.ரகுமான் இசையில் , ஏ.ஆர்.ரகுமான், சின்மயி, முர்தாசா மற்றும் குவாதீர் பாடினார்கள்.
Remove ads
இந்தி பதிப்பில்
இப்படத்தின் இந்தி பதிப்பில், இப்பாடலை ஏ.ஆர்.ரகுமான் , முர்தாசா மற்றும் சின்மயி பாடினார்கள். தேரே பினா என்று தொடங்கிய பாடலை குல்சார் எழுதினார்.
ஜோடி ஜோடி பாடல்
மணிரத்னம் அவர்கள் இயக்கத்தில் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளிவந்த தமிழ் படமான குரு படத்தில் இடம்பெற்ற பாடலே ஜோடி ஜோடி. இப்பாடலின் வரிகளை வைரமுத்து எழுத ,ஏ.ஆர்.ரகுமான் இசையில் , எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் சித்ரா பாடினார்கள்.
Remove ads
இந்தி பதிப்பில்
இப்படத்தின் இந்தி பதிப்பில், இப்பாடலை பப்பி லஹிரி மற்றும் சித்ரா பாடினார்கள். ஏக் லோ ஏக் முப்ட் என்று தொடங்கிய பாடலை குல்சார் எழுதினார்.
பிற தகவல்கள்
- தெலுங்கில் குருகாந்த் எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.[2]
- தமிழில் அபிஷேக் பச்சனுக்கு நடிகர் சூர்யாவும், மிதுன் சக்கரவர்த்திக்கு நடிகர் நாசரும் ஐஸ்வர்யா ராயிக்கு நடிகை ரோகிணியும், வித்யா பாலனுக்கு தீபா வெங்கட்டும் மாதவன் சொந்தக்குரலிலும் குரல் கொடுத்துள்ளனர்.
- குரு கனடா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதலாவது இந்திய திரைப்படமாகும்.[3]
உசாத்துணை
வெளி இணைப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads