ஏ. ஸ்ரீகர் பிரசாத்
இந்திய திரைப்படத் தொகுப்பாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஸ்ரீகர் பிரசாத் (A. Sreekar Prasad) என்கிற அக்கினேனி ஸ்ரீகர் பிரசாத், ஒரு இந்திய திரைப்படத்துறையில், திரைப்படத் தொகுப்பு பிரிவில் பணியாற்றியுள்ளதன் மூலம் அறியப்படுகிறார்.[1] இவர் இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் மொழித் திரைப்படங்களில் அதிகமாக பணியாற்றுகிறார். இவரது கடைசி சிறந்த படத்தொகுப்பிற்கான தேசிய திரைப்பட விருது பெற்ற திரைப்படம் ஃபிராக் (2008) ஆகும். இப்படத்தை நந்திதா தாஸ் இயக்கியுள்ளார். இவர் பல மொழிகளில் இந்திய திரைப்படத்துறையில் பங்களித்ததற்காக, 2013 ஆம் ஆண்டின் மக்கள் என லிம்கா புக் ஆஃப் ரெகார்ட்ஸில் சேர்க்கப்பட்டார், மேலும், இவர் ஒரு சிறப்பு ஜூரி விருது உட்பட எட்டு தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.[2][3]
Remove ads
தொழில்
ஸ்ரீகர் பிரசாத் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இலக்கியத்தில் பட்டம் பெற்றவர். ஆந்திரத் திரைப்படத்துறையில் பணியாற்றிய அவரது தந்தையிடமிருந்து திரைப்படத் தொகுப்பின் கலையை கற்றுக்கொண்டார்.[4]தெலுங்குத் திரைப்படங்களுடன் இவர் தன் தொழில் வாழ்க்கையை துவங்கினார் என்றாலும், மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களின் மூலம் தேசிய விருதைப் பெற்றார். இவர், ஏழு முறை சிறந்த படத்தொகுப்பிற்காக தேசிய விருதைப் பெற்றார். மற்றும் ஒரு சிறந்த ஜூரி விருதை தனது இரண்டு தசாப்தங்களில் பெற்றுள்ளார்.[5] இவரது படத்தொகுப்பில் வெளியான திரைப்படங்களில் யோதா (1992), "நிர்ணயம்" (1995), வானபிரஸ்தம் (1999), அலைபாயுதே (2000), தில் சாத்தா ஹை" (2001), கன்னத்தில் முத்தமிட்டால் (2002), ஒக்கடு (2003), ஆய்த எழுத்து / யுவ (2004), நவரசா (2005), ஆனந்தபத்ரம் (2005), குரு (2007), பில்லா (2007), ஃபிராக் (2008), பழசி ராஜா (2009) மற்றும் தல்வார் (2015) போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.
Remove ads
சொந்த வாழ்க்கை
தெலுங்கு நடிகர் எல்.வி. பிரசாத் சகோதரர் அக்கினேனி சஞ்சீவிக்கு, ஸ்ரீகர் பிரசாத் பிறந்தார்.[6] இவரது மகன் அக்சய் அக்கினேனி, பீட்சா (2014) திரைப்பட இயக்குனராவார். அக்சய், நடிகர் ஆர்.பார்த்திபன் மற்றும் நடிகை சீதாவின் மகள் பி. எஸ். கீர்த்தனாவை மணந்தார். ஸ்ரீகர் பிரசாத், கீர்த்தனா குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தின் படத் தொகுப்பாளர் ஆவார். கீர்த்தனா இப்படத்தில் நடித்ததற்காக, 2002 ல் சிறந்த குழந்தை கலைஞருக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றார்.
Remove ads
விருதுகள்
- 1989: சிறந்த படத்தொகுப்பு - ராக்
- 1997: சிறந்த படத்தொகுப்பு - ராக் பிராக்
- 1998: சிறந்த படத்தொகுப்பு - த டெரரிஸ்ட்
- 2000: சிறந்த படத்தொகுப்பு - வானபிரஸ்தம்
- 2002: சிறந்த படத்தொகுப்பு - கன்னத்தில் முத்தமிட்டால்
- 2008: சிறந்த படத்தொகுப்பு - ஃபிராக்
- 2010: சிறப்பு ஜூரி விருது - குட்டி ஸ்ரங்க் , காமினி , கேரளா வர்மா பழசி ராஜா
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads