குர்கான் மாகாணம்

From Wikipedia, the free encyclopedia

குர்கான் மாகாணம்
Remove ads

குர்கான் மாகாணம் (Kurgan Oblast, (உருசியம்: Курга́нская о́бласть, குர்கான்ஸ்கயா ஓபிலாஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகு ஆகும். இதன் நிர்வாக மையம் குர்கன் நகரம் ஆகும். சூன் 2014 ல், மக்களில் 874,100 இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.[13] 2010 மக்கள் கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 910,807 இருந்தது.[9]

விரைவான உண்மைகள் குர்கான் மாகாணம்Kurgan Oblast, நாடு ...
Remove ads

நிலவியல்

குர்கான் மாகாண்ம் தெற்கு உருசியாவில் அமைந்துள்ளது. இது யூரல் கூட்டமைப்பு மாவட்டத்தைச் சேர்ந்தது. இது தன் எல்லைகளை மேற்கில் செல்யபின்ஸ்க் ஒப்லாஸ்து, வடமேற்கில் சுவெட்லோஸ்க் ஒப்லாஸ்து, வட-கிழக்கில் தியூமென் ஒப்லாஸ்து, தெற்கில் கசக்ஸ்தான் ஆகியவற்றுடன் பகிர்ந்து கொள்கிறது.

காலநிலை

இந்த ஒப்லாஸ்து நீண்ட குளிர் காலம் மற்றும் வழக்கமான வறட்சி கொண்ட சூடான கோடை போன்ற கடுமையான தட்பவெப்பநிலை கொண்டது. இதன் சராசரி சனவரி வெப்பநிலை -18 டிகிரி செல்சியஸ் (0 ° பாரன்கீட்) இப்பகுதியின் வெப்பமான மாதமான சூலை மாதத்தின் சராசரி வெப்பநிலை (ஜூலை) +19 டிகிரி செல்சியஸ் (66 டிகிரி பாரன்கீட்) ஆகும். ஆண்டு சராசரி மழைபொழிவு 400 மில்லி மீட்டர் (16) ஆகும்.[14]

பொருளாதாரம்

குர்கன் ஒப்லாஸ்து, பிரதேசத்தின் எல்லைப் பகுதியில் எண்ணெய், எரிவாயு உள்ள மாவட்டங்கள் தியூமென் ஒப்லாஸ்து பகுதியில் அமைந்துள்ளது. மேலும் இதேபோன்று தோம்ஸ்க் ஒப்லாஸ்துக்கு அருகில் உள்ள மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளில் உள்ள எண்ணெய் வயல்களில் இருந்து பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்கள் இதன் எல்லைப் பகுதிகள் வழியாக, உரால் மற்றும் சைபீரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை நோக்கி செல்கின்றன. இதன் முதன்மை தொழில்துறை மையங்களாக குர்கன் , மற்றும் சர்டிரின்ஸ்க் ஆகும்.[14] இந்த ஒப்ளாஸ்து பெரிய அளவில் பொருளாதார கனிம வளங்கள் கொண்டதாக இல்லை; எனவே வேளாண் பொருட்கள் அடிப்படையிலான துணைத் தொழில்களான தயாரிப்புகளை சிப்பமிடுதல் போன்றவை உள்ளன. உணவு துறை இங்கு நன்கு வளர்ந்த துறையாக உள்ளது. இங்கே இறைச்சி பதப்படுத்துதல், மாவு ஆலைகள், பால்மா தொழிற்சாலைகள் போன்றவை உள்ளன.[14] இரண்டாம் உலகப் போரின் 1941-1942 காலகட்டத்தில் போது நவீன பெரிய அளவிலான தொழிற்சாலைகள் இப்பிராந்தியத்தில் உருவாகத்துவங்கின. நாட்டின் மேற்கு பகுதிகளில் இருந்து பதினாறு நிறுவனங்கள் இங்கே இடம் பெயர்ந்தன.

மக்கள் வகைப்பாடு

மக்கள் தொகை: 910,807 ( 2010 கணக்கெடுப்பு ); 1,019,532 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 1,104,872 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .) ரஷ்யர்களே இப்பிராந்தியத்தின் மிகப்பெரிய இனக்குழுவினர் (823,7222) ஆவர், மக்கள் தொகையில் 92.5% உள்ளனர். ஒப்ளாஸ்து பகுதியில் உள்ள மற்ற முக்கிய இன குழுக்கள் [9] தாதர்கள் (17,017) 1.9% , பாஷ்கிர்கள் (12,257) 1.4%, கசக்குகள் (11,939) 1.3%, உக்ரைனியர் (7,080) at 0.8%. பிற இனக்குழுவினர் 2.1%. 20.017 மக்கள் நிர்வாக தரவுத்தளங்கள் தங்கள் இனம் குறித்து அறிவிக்க வில்லை.[15]

  • பிறப்பு (2010): 11,862 (1000 13.0)
  • இறப்பு (2010): 14,590 (1000 16.0)[16]
  • மொத்த கருத்தரிப்பு விகிதம்:[17][18]
  • 2000 - 1.38
  • 2001 - 1.35
  • 2002 - 1.45
  • 2003 - 1.40
  • 2004 - 1.46
  • 2005 - 1.40
  • 2006 - 1.43
  • 2007 - 1.59
  • 2008 - 1.72
  • 2009 - 1.77
  • 2010 - 1.79
  • 2011 - 1.82
  • 2012 - 2.03
  • 2013 - 2.12
  • 2014 - 2.10 (இ)
  • 2012 முக்கிய புள்ளிவிவரங்கள்
  • பிறப்பு: 12 400 (1000 ஒன்றுக்கு 13.8)
  • இறப்பு: 14 216 (1000 ஒன்றுக்கு 15.9) [19]
  • மொத்த கருத்தரிப்பு விகிதம்: 2.03
Remove ads

சமயம்

2012 ஆண்டின் உத்தியோகபூர்வ கணக்கெடுப்பு படி[20] குர்கான் ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 28.4% பேர் உருசிய மரபுவழித் திருச்சபையை பின்பற்றுகின்றனர், 6% பொதுவான கிருத்துவர் , 2% இஸ்லாமியர் , 1% பின்பற்றுவது ஸ்லாவிக் நாட்டுப்பற மதம், 0.4% இந்து மதத்தினர், 36% மக்கள் ஆன்மீக, மத நாட்டமற்றவர்கள். 14% நாத்திகர் , மற்றும் 12.2% மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது மதம் பற்றிய கேள்விக்கு பதிலலளிக்காதவர்கள் ஆவர்.[20]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads