குறிஞ்சா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குறிஞ்சா என்பது கொடி இனத்தைச் சேர்ந்த ஒரு தாவரம். இது பிற தாவரத்தைச் சுற்றி அதன் மீது படரும் தன்மை உடையது.
Remove ads
சிறு குறிஞ்சா
சிறுகுறிஞ்சா இலைகள் ஏறக்குறைய வெற்றிலையை ஒத்திருக்கும். இலைகள் சிறியதாக இருக்கும். குற்றுச்செடிகளின் மேல் ஏறி படரும் தன்மையுடையது. மெல்லிய கொடியை உடையது. இதன் இலைகள் சர்க்கரை நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது.
பெரு குறிஞ்சா
பெருங்குறிஞ்சா தடித்த வலிமையான கொடியை உடையது. பெரிய மரங்களின் மீது ஏறி படரும். இலைகள் பெரிதாக காணப்படும். குறிஞ்சாவின் காய்கள் இரண்டு இரண்டாக காய்க்கும். காயின் அடிபகுதி சிறுத்தும் நடுப்பகுதி பருத்தும் நுனிப்பகுதி சிறுத்தும் காணப்படும். காய்கள் ஒரே இடத்தில் தொடங்கி எதிர் எதிர் திசையில் இருக்கும். பார்ப்பதற்கு மனிதனின் மீசையை ஒத்திருக்கும். அதனால் இக்காயை சிறுவர்கள் மீசைக்காய் எனக் கூறுவர்.
காய் முற்றி நெற்றாகி வெடிக்கும். உள்ளிருந்து பஞ்சு வெளியேறி பறக்கும். அடிப்பகுதியில் விதை காணப்படும். விதையில் தொடங்கி பஞ்சு இழைகள் மேல் நோக்கி இருக்கும். அவை காற்றில் விதையுடன் பறக்கும். அது மரம் வேலி போன்ற வற்றால் தடுக்கப்பட்டு விழுந்து முளைக்கும். இது காற்றின் மூலம் விதை பரவுதலுக்கு சிறந்த எடுத்துகாட்டு ஆகும். பெரு குறிஞ்சாவின் இலைகள் மிகுந்த கசப்பு சுவை உடையது. இதனை பொரியல் செய்யும் முறை உப்பு ,பச்சை மிளகாய்,சின்ன வெங்காயம் இவற்றை அவித்து பின் மயிர் போல் அரிந்த குறிஞ்சாவை சேர்து இரண்டு நிமிடத்தில் சமைத்து முடியுங்கள்.இதுவே பாரம்பரிய முறை.
Remove ads
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads