குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம்

From Wikipedia, the free encyclopedia

குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம்
Remove ads

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம் என்பது இந்திய அரசின் அமைச்சகம் ஆகும். இது இந்தியாவில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொடர்பான விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் சட்டங்களை உருவாக்குதல் மற்றும் நிர்வகிப்பதற்கான உச்ச நிர்வாக அமைப்பாகும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் ஜீதன் ராம் மாஞ்சி ஆவார்.

விரைவான உண்மைகள் துறை மேலோட்டம், ஆட்சி எல்லை ...
Remove ads

வரலாறு

சிறுதொழில் மற்றும் வேளாண் மற்றும் கிராமப்புற தொழில்கள் அமைச்சகம் அக்டோபர் 1999இல் உருவாக்கப்பட்டது. செப்டம்பர் 2001இல் இந்த அமைச்சகம் சிறுதொழில் அமைச்சகம் மற்றும் வேளாண் மற்றும் கிராமப்புற தொழில் அமைச்சகம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 9 மே 2007 அன்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் நிறுவப்பட்டது.

வழங்கும் சேவைகள்

  • குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர் மேம்பாட்டுக்கான கருவிகள், பயிற்சிக்கான வசதிகள் வழங்குதல்
  • திட்டம் மற்றும் தயாரிப்பு விவரங்களை தயாரித்தல்
  • தொழில்நுட்ப மற்றும் நிர்வாக ஆலோசனை வழங்குதல்
  • ஏற்றுமதிக்கான உதவி செய்தல்
  • மாசு மற்றும் ஆற்றல் தணிக்கை

இது பொருளாதார தகவல் சேவைகள், மேம்பாட்டிற்கான கொள்கை உருவாக்கத்தில் அரசுக்கு ஆலோசனை வழங்குகிறது. கள அலுவலகங்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே பயனுள்ள இணைப்புகளாகவும் செயல்படுகின்றது.

தொடர்புடைய அமைப்புகள்

  • MSME-எம் எஸ் எம் இ தொழில்நுட்ப மையம், பட்டி சோலான்
  • மத்தியா கருவிகள் நிறுவனம் லூதியானா[2]
  • மத்திய கருவி விரிவாக்க மையம், நிலோக்கேரி
  • இந்தோ-டானிஷ் கருவிகள் மையம், ஜாம்செட்பூர்
  • ஒருங்கிணைந்த பயிற்சி மையம், நிலோக்கேரி
Remove ads

பணிகள்

இது மாநில அரசின் நிதியுதவியுடன் கைவினைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கிறது. இது பல்வேறு வளர்ச்சி நிறுவனங்களில் ஈடுபட்டுள்ள விரிவாக்க அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்கிறது. இது பட்டம்/பட்டயப் பொறியாளர்களுக்கான கோடைகால பயிற்சி திட்டங்களை வழங்குகிறது.

மைய அமைப்புகள்

  • காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம்
  • அமைப்புசாரா தொழில்முனைவோர் தேசிய ஆணையம்
  • தேசிய சிறு தொழில்கள் நிறுவனம்
  • தேசிய தலைமைத்துவப் பள்ளி
  • குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தேசிய நிறுவனம்[3]
  • தேசிய தொழில்முனைவோர் & சிறு வணிகர்கள் மேம்பாட்டு நிறுவனம் [4]

முன்னெடுப்புகள்

பிரதம அமைச்சர் வேலைவாய்ப்பு உருவாக்கல் திட்டம்

2008-09ஆம் ஆண்டில் குறு, சிறு நிறுவனங்களை நிறுவுவதன் மூலம் நாட்டில் சுய வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கான திட்டமாக தொடங்கப்பட்டது. இது கடனுடன் இணைக்கப்பட்ட மானியத் திட்டமாகும். இதில் உற்பத்தித் துறைக்கு 25 இலட்சம் மற்றும் சேவைத் துறைக்கு 1000 இலட்சம் வரை தகுதியான பயனாளிகளுக்கு கடன்கள் வழங்கப்படும். இதற்காக 35% வரை மானியம் வழங்கப்படுகிறது.

காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் மூலம் தேசிய அளவில் ஊரகப் பகுதிகளில் உள்ள தனி நபர்கள், பதிவு செய்யப்பட்டச் சங்கங்கள் மற்றும் தொண்டு நிறுவங்களுக்கு உற்பத்தித் தொழில் செய்ய கடனுடன் கூடிய மானியத் தொகை வழங்கப்படுகிறது.[5]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads