குல்சாரிலால் நந்தா
இந்திய அரசியல்வாதியும், தொழிலாளர் சிக்கலில் நிபுணத்துவம் பெற்ற பொருளாதார அறிஞரும் ஆவார். இவர From Wikipedia, the free encyclopedia
Remove ads
குல்சாரிலால் நந்தா (Gulzarilal Nanda; 4 சூலை 1898 – 15 சனவரி 1998) இந்திய அரசியல்வாதியும், தொழிலாளர் சிக்கலில் நிபுணத்துவம் பெற்ற பொருளாதார அறிஞரும் ஆவார். இவர் இரண்டு முறை தலா 13 நாட்கள் இந்தியாவின் இடைக்கால பிரதமராக இருந்துள்ளார். 1964 இல் ஜவகர்லால் நேரு இறந்தபொழுது முதல் முறையும், 1966 இல் லால் பகதூர் சாஸ்திரி இறந்தபொழுது இரண்டாவது முறையும் இடைக்கால பிரதமராக பதவி வகித்தார்.
இவர் காந்தியின் கொள்கைகளை கடைபிடிக்கும் காந்தியவாதி ஆவார். இந்திய அரசு இவருக்கு 1997இல் பாரத ரத்னா விருது கொடுத்து கௌரவித்தது.
நந்தா சூலை 4, 1898 இல் பஞ்சாப் மாகாணத்திலுள்ள சியால்கோட் என்னுமிடத்தில் இந்து கட்ரி குடும்பத்தில் பிறந்தார். சியால்கோட் தற்போது பாகிஸ்தான் பஞ்சாபில் உள்ளது. நந்தா லாகூர், ஆக்ரா மற்றும் அலகாபாத் நகரங்களில் படித்தார்.
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads