குவாடர்

துறைமுக நகரம் மற்றும் தெற்கு பலுசிஸ்தானின் தலைநகரம், பாகிஸ்தான் From Wikipedia, the free encyclopedia

குவாடர்
Remove ads

குவாடர் (Urdu: گوادر; பலுச்சு மொழி: گُوْادر) பாக்கித்தானின் தென்மேற்கு பகுதியிலுள்ள ஒரு துறைமுக நகரம் . அரபிக் கடலின் கரையில் அமைந்துள்ள இந்நகரம் பாக்கித்தானின் மிகப்பெரிய நகரம், கராச்சி. யிடம் இருந்து சுமார் 700 கிமீ தொலைவில் உள்ளது. குவாடர் ஈரான் ஓமான் பாரசீக வளைகுடா அருகில் உள்ளது.

விரைவான உண்மைகள் குவாடர் گوادر, Country ...

குவாடரும் அதை ஒட்டியுள்ள இடங்களும் 1783லிருந்து 1958 செப்டம்பர் வரை மசுக்கட், ஓமான் சூல்தானேட்டுகளுக்கு உரிமையுள்ளதாக இருந்தது.1958 செப்டம்பர் 8 அன்று பாக்கித்தான் இப்பகுதியை வாங்கியது. டிசம்பர் 8, 1958 இப்பகுதியின் கட்டுப்பாட்டை பாக்கித்தான் ஏற்றுக்கொண்டு யூலை 1, 1977 அன்று பலூச்சித்தான் மாகாணந்துடன் குவாடர் மாவட்டம் பெயரில் இணைந்தது.

வரலாற்றின் பெரும்பாலான காலங்கள் குவாடர் மரபு வழி மீனவர்கள் உள்ள சிறிய குடியிறுப்பாக இருந்தது. 1954ஆம் ஆண்டே இது சிறப்பான இடத்தில் உள்ளது உணரப்பட்டது. ஓமன் கட்டுப்பாட்டில் உள்ள போதே பாக்கித்தானின் வேண்டு கோளுக்கு இணங்க அமெரிக்கா குவாடரை ஆழ் கடல் துறைமுகம் என்பதை அறிந்ததிலிருந்து இதன் சிறப்பு உணரப்பட்டது.[2] 2001ஆம் ஆண்டு வரை குவாடரின் ஆழ் கடல் சிறப்பை அடுத்தடுத்து வந்த பாக்கித்தானின் அரசுகள் உணர்ந்து பயன்படுத்தவில்லை. [3] 2007ஆம் ஆண்டு பெர்வேசு முசாரப் $248 மில்லியன் அளவில் முதல் கட்டமாக குவாட்டர் விரிவாக்கப்பட்டது.[4] பல்வேறு கட்டுமானங்களுக்கு பின்பும் இத்துறைமுகம் பல்வேறு காரணங்களால் பயன்படுத்தப்படாமல் இருந்தது. பாக்கித்தான் அரசு சிங்கப்பூர் துறைமுக கழகத்திற்கு குவாடரின் அதிகாரத்தை மாற்றப்படாததும் காரணமாகும்.[5]

ஏப்ரல் 2015, அன்று பாக்கித்தான் மற்றும் சீனா குவாடரை $46 பில்லியன் செலவில் சீனா-பாக்கித்தான் பொருளாதார பாதை மூலம் முன்னேற்றுவதாக அறிவித்தது.[6] இது சீனாவின் புதிய பட்டுப் பாதையில் சிறப்பான இடத்தைப்பெற்றுள்ளது.[7] இத்திட்டத்தின் படி குவாடரில் $1.153 மில்லியன் அளவுக்கு உள்கட்டுமான பணிகளுக்கு சீனா ஒதுக்கியுள்ளது.[8] இதனால் வட பாக்கித்தானையும் மேற்கு சீனாவையும் ஆழ் கடல் துறைமுகத்தின் மூலம் இணைக்க இத்திட்டம் முடிவுசெய்துள்ளது.[9] இந்நகரில் மிதக்கும் திரவு எரி வளி கட்டமைப்பை கட்ட $2.5 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது..[10] குவாடர் நகரில் பொருளாதார பாதை மூலம் முதலீடுகள் செய்யப்படுவதுடன் சீன வெளிநாட்டு துறைமுக ஓல்டிங் நிறுவனம் யூன் 2016 அன்று $2 மில்லியன் அளவுக்கு கட்டுமானப் பணிகளுக்கு குவாடர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் முதலீடு செய்துள்ளது,[11] இது சீன சிறப்பு பொருளாதார மண்டல மாதிரியில் அமைந்துள்ளது..[12] செப்டம்பர் 2016 அன்று பழைய குவாடர் நகர வளர்ச்சிக்கு குவாடர் வளர்ச்சி கழகம் ஒப்பந்தப் புள்ளிகளை கோரியுள்ளது.[13]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads