பெர்வேஸ் முஷாரஃப்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெர்வேஸ் முஷாரஃப் (Pervez Musharraf; 11 ஆகத்து 1943 – 5 பெப்ரவரி 2023) பாகிஸ்தானின் முன்னாள் இராணுவத் தளபதியும் அதிபரும் ஆவார். இவர் 1999 ஆம் ஆண்டில் பிரதமர் நவாஸ் செரிபின் ஆட்சியைக் கலைத்து இராணுவ சதிப்புரட்சி மூலம் நாட்டின் அதிபரானார். பதவியேற்றவுடன் இராணுவப் பதவியைக் கைவிடுவதாக அறிவித்த போதும் அதனைச் செய்ய மறுத்தார். இனிவரும் தேர்தலில் வெற்றி பெற்றால் இராணுவத் தளபதிப் பொறுப்பில் இருந்து விலகுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இவர் அமெரிக்கச் சார்புக் கொள்கையைக் கையாண்டு வருகின்றார்.[1]
2007 மார்ச் மாதம் நாட்டின் உயர்நீதிமன்ற நீதிபதியைப் பதவி விலக்கியதில் இருந்து மக்கள் மத்தியில் இவரது செல்வாக்குக் குறையத் தொடங்கியது. மேலும் 2007 ஜூலை மாதம் இவரது கட்டளைப்படி இஸ்லாமாபாத்தின் செம்மசூதியை ஒரு வாரம் வரையில் முற்றுகையிட்டிருந்த பாகிஸ்தானிய இராணுவம் உள்நுழைந்து அதில் தங்கியிருந்த அல்-கைடா ஆதரவுத் தீவிரவாதிகளைக் கொன்றது.[1]
2008இல் ஆகஸ்ட் 18ஆம் தேதி, இவர் பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads