குவாரசமியப் பேரரசு
துருக்கிய-பாரசீகப் பேரரசு (1077-1231) From Wikipedia, the free encyclopedia
Remove ads
குவாரசமியப் பேரரசு[note 2][8] என்பது தற்போதைய நடு ஆசியா, ஆப்கானித்தான் மற்றும் ஈரான் ஆகியவற்றின் பெரும் பகுதிகளைத் தன்னகத்தே கொண்டிருந்த ஒரு முன்னாள் நாடு ஆகும். இது துருக்கிய-பாரசீகக்[9] கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. சன்னி இசுலாம் மதத்தை பின்பற்றிய ஒரு முஸ்லிம் பேரரசாக இருந்தது. இது 1077 முதல் 1231ஆம் ஆண்டு வரை நீடித்தது. முதலில் செல்யூக் பேரரசு மற்றும் காரா கிதைக்கு (மேற்கு லியாவோ அரசமரபு)[10] அடிபணிந்த நாடாக இது இருந்தது.[11] பிறகு சுதந்திரமாக இந்நாடு செயல்பட்டது. பதின்மூன்றாம் நூற்றாண்டில் மங்கோலியப் படையெடுப்பு வரை இது அவ்வாறாக நீடித்தது. மதிப்பீட்டின் படி, இதன் பரப்பளவு 23,00,000[12] முதல் 36,00,000[13] சதுர கிலோமீட்டர் ஆகும். வரலாற்றின் மிகப் பெரிய நிலப் பேரரசுகளில் ஒன்றாக இது திகழ்ந்தது. பதின்மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முஸ்லிம் உலகில் இந்தப் பேரரசானது முதன்மையான சக்தி வாய்ந்த நாடாக இருந்தது. இதன் முன்னிருந்த நாட்டை அடிப்படையாக கொண்டு உருவான இந்தப் பேரரசானது பெரும்பாலும் கிப்சாக் துருக்கியர்களைக் கொண்டிருந்த ஒரு பெரிய குதிரைப்படை இராணுவத்தால் தற்காக்கப்பட்டது.[14]
எனினும், 1219ஆம் ஆண்டு மங்கோலியர்கள் தங்களது மன்னர் செங்கிஸ் கானின் தலைமையில் குவாரசமியப் பேரரசு மீது படையெடுத்தனர். ஒட்டு மொத்தப் பேரரசையும் இரண்டே ஆண்டுகளில் வெற்றிகரமாகக் கைப்பற்றினர். நகரங்களை முற்றுகையிட்டுச் சூறையாடினர். மனித வரலாற்றின் குருதி தோய்ந்த போர்களில் ஒன்றில் இந்நாட்டில் வாழ்ந்து வந்த குடிமக்களைக் கொன்றனர்.
Remove ads
குறிப்புகள்
- Also known as Khwarazm (Persian: خوارزم, romanized: Khwārazm) or the Khwarazmshahs (Persian: خوارزمشاهیان, romanized: Khwārazmshāhiyān)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads