கெடுக்கான் புக்கிட் கல்வெட்டு
1920 நவம்பர் 29-ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு From Wikipedia, the free encyclopedia
Remove ads
கெடுக்கான் புக்கிட் கல்வெட்டு (ஆங்கிலம்: Kedukan Bukit Inscription; இந்தோனேசியம்: Prasasti Kedukan Bukit) என்பது டச்சு கிழக்கிந்திய தீவுகளின் (Dutch East Indies) (தற்போது இந்தோனேசியா) சி.ஜே. பேடன்பர்க் எனும் இடச்சுக்காரரால் 1920 நவம்பர் 29-ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு ஆகும்.[1]
இந்தக் கல்வெட்டு, தெற்கு சுமாத்திராவில் உள்ள கெடுக்கான் புக்கிட் (Kedukan Bukit), மூசி ஆற்றின் (Musi River) துணை ஆறான தாதாங் ஆற்றின் (Tatang River) கரையில் கண்டுபிடிக்கப்பட்டது.
Remove ads
பொது
இந்தக் கல்வெட்டு, பழைய மலாய் மொழி சார்ந்த கல்வெட்டுகளில் எஞ்சியிருக்கும் மிகப் பழமையான கல்வெட்டு என்று அறியப்படுகிறது.[2] இது 45 செ.மீ × 80 செ.மீ (18 அங்குலம் × 31 அங்குலம்) அளவுள்ள ஒரு சிறிய கல்வெட்டு ஆகும்.
கெடுக்கான் கல்வெட்டு, பல்லவ எழுத்துகளில் எழுதப்பட்டது;[3][4] மேலும், கி.பி 683 மே 1-ஆம் தேதி என தேதியிடப்பட்டு உள்ளது.[5]
உள்ளடக்கம்

ஒலிபெயர்ப்பு
மொழிபெயர்ப்பு
“ | ஓம் சுவ்ச்ச்ஸ்தி அஸ்து! அனைத்தும் வாழ்க வளமுடன். சாலிவாகன ஆண்டு நாட்காட்டியின் 605-ஆம் ஆண்டில், வைசாகா மாதத்தின் பதினொன்றாம் நாளில், சித்தயாத்திரை பெறுவதற்காக ஸ்ரீ பகிந்தா (ஜெயநேசன்) துளையிடும் படகுகளை எடுத்தார். 7-ஆம் நாள், ஜயேஷ்ட மாதத்தின் 15-ஆம் நாளில், ஸ்ரீ பகிந்தா மினாங்கா தாம்பவானில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார்.
அவர் தன்னுடன் 20,000 துருப்புக்களை அழைத்துச் சென்றார் ... 1,312 காலாட்படை வீரர்கள் 200 படகுகளில் இருந்தனர். மாதத்தின் பதினைந்தாம் நாளில் உண்மையிலேயே அவர்கள் மகிழ்ச்சியாக... சுறுசுறுப்பாக, அவர்கள் நாட்டிற்காக பயணம் மேற்கொண்டனர் ... சிறந்த சிறீவிஜயம்! செழிப்பு மற்றும் செல்வம் ... |
” |
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads