இடச்சு கிழக்கிந்தியத் தீவுகள்

நவீன இந்தோனேசியாவின் பெரும்பான்மைப் பகுதிகளை உள்ளடக்கிய ஓர் இடச்சு குடியேற்றப் பகுதி From Wikipedia, the free encyclopedia

இடச்சு கிழக்கிந்தியத் தீவுகள்
Remove ads

இடச்சு கிழக்கிந்தியத் தீவுகள் (ஆங்கிலம்: Dutch East Indies அல்லது Netherlands East Indies; இந்தோனேசியம்: Hindia Belanda; இடச்சு: Nederlands-Indië) என்பது நவீன இந்தோனேசியாவின் பெரும்பான்மைப் பகுதிகளை உள்ளடக்கிய ஓர் இடச்சு குடியேற்றப் பகுதியாகும். இதற்கு 1945 ஆகத்து 17 அன்று விடுதலை (Proclamation of Indonesian Independence) அறிவிக்கப்பட்டது.

விரைவான உண்மைகள் இடச்சு கிழக்கிந்தியத் தீவுகள் Dutch East Indies Hindia Belanda Hindia Nederlands-Indië, நிலை ...

இந்தோனேசியாவின் விடுதலைப் போரைத் (Indonesian National Revolution) தொடர்ந்து, இந்தோனேசியாவும் நெதர்லாந்தும், 1949-இல் ஓர் அமைதி நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டன. 1824-ஆம் ஆண்டின் ஆங்கிலோ-இடச்சு உடன்படிக்கையின் வழி, இடச்சு அரசாங்கம், மலாக்காவின் ஆளுமையை (Dutch Malacca) பிரித்தானியாவிற்குக் கொடுத்தது. இந்த மலாக்கா மாநகரம், தற்போது நவீன மலேசியாவின் மலாக்கா மாநிலத்தின் தலைநகரமாக உள்ளது.

1800-இல் இடச்சு அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் இருந்த இடச்சுக் கிழக்கிந்திய நிறுவனம் (Dutch East India Company) தேசியமயமாக்கப்பட்டது. அந்தக் கட்டத்தில், வணிக நிலையில் இருந்த இடச்சு கிழக்கிந்திய தீவுகள் என்பது இடச்சுப் பேரரசின் (Batavian Republic) குடியேற்றப் பகுதியாக தரம் உயர்த்தப்பட்டது.

Remove ads

பொது

19-ஆம் நூற்றாண்டில் இடச்சுக்காரர்கள், ​​கிழக்கிந்திய தீவுகளில் ஏற்கனவே ஆளுமையில் இருந்த பூர்வீக ஆட்சியாளர்களுக்கு எதிராகவும்; மற்றும் பொது மக்களுக்கு எதிராகவும் பல போர்களை நடத்தினர். அந்தப் போர்களில் நூறாயிரக்கணக்கான இறப்புகள் நடந்தன.[3]

20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மேற்கு நியூ கினி, இடச்சுக்காரர்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. அந்த ஆக்கிரமிப்புடன் அப்போதைய இடச்சு ஆட்சி, மிகப்பெரிய பிராந்திய ஆளுமையாக மாறியது.[4] இடச்சு கிழக்கிந்தியத் தீவுகள், ஐரோப்பிய ஆளுமையின் கீழ் மிகவும் மதிப்புமிகு குடியேற்றங்களிகளில் ஒன்றாக விளங்கியது.[5]

சுரண்டல் உழைப்பு

இருப்பினும், இடச்சு கிழக்கிந்தியத் தீவுகளின் வருமானம், பெரும்பாலும் உள்நாட்டுச் சுதேசி மக்களின் சுரண்டல் உழைப்பையே சார்ந்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.[6] 19-ஆம் நூற்றாண்டில் மசாலா எனும் நறுமணப் பொருட்கள்; மற்றும் பணப்பயிர் வேளாண்மை வணிகத்தில், இடச்சுப் பேரரசு பன்னாட்டு அளவில் முதன்மை வகித்தது.

20-ஆம் நூற்றாண்டில் நிலக்கரி மற்றும் எண்ணெய்க் கனிம ஆய்வுகளுக்கும் இடச்சு கிழக்கிந்தியத் தீவுகள் அளப்பரிய அளவிற்கு பங்களித்து உள்ளன.[6] காலனித்துவ சமூக ஒழுங்கானது (Colonial Social Order) கடுமையான இனவாதத்திற்குள் மூழ்கி இருந்தது. டச்சு உயரடுக்கு அதிகாரத்தினர், பொதுமக்களிடம் இருந்து விலகித் தனித்தனியாக வாழ்ந்தாலும், குடிமக்கள் மீதான அதிகார ஆளுமை முறைப்பாட்டில் மட்டுமே இணைக்கப்பட்டு இருந்தனர்.[7]

உள்ளூர் அறிவாளர்கள்

இந்தோனேசியா எனும் சொல், புவியியல் அடிப்படையில், இருப்பிட அமைவிற்கு ஏற்ப, 1880-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகுதான் பயன்படுத்தப்பட்டது. 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், உள்ளூர் அறிவாளர்கள் இந்தோனேசியாவை ஒரு தேசிய நாடாகக் கருதி, விடுதலை இயக்கத்திற்கான களத்தை அமைத்தனர்.[8]

சப்பானின் இரண்டாம் உலகப் போரின் ஆக்கிரமிப்பு (Japanese occupation of the Dutch East Indies); இடச்சு காலனித்துவ அரசையும்; அதன் பொருளாதாரத்தின் பெரும்பகுதியையும் சிதைத்து விட்டது.

Remove ads

இந்தோனேசிய தேசிய புரட்சி

ஆகத்து 15, 1945-இல் சப்பான் சரண் அடைந்ததைத் (Surrender of Japan) தொடர்ந்து, இந்தோனேசிய தேசியவாதத் தலைவர்களான சுகார்னோ மற்றும் முகமது அட்டா ஆகிய இருவரும் இந்தோனேசிய தேசியப் புரட்சியைத் தூண்டும் வகையில் இந்தோனேசிய விடுதலை நாள் அறிவிப்பைச் செய்தனர்.

டச்சுக்காரர்கள், கிழக்கிந்தியத் தீவுக்கூட்டத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டு,[9] ஏறக்குறைய 220,000 துருப்புக்களைக் களம் இறக்கினர். இந்தோனேசிய தேசியவாதிகளுடன் போர்க்களத்தில் போரிட்டனர்.[10]

இடச்சு-இந்தோனேசிய வட்ட மேசை மாநாடு

இந்தோனேசியாவிடம் அதன் இறையாண்மையை மாற்ற ஒப்புக் கொள்ளாவிட்டால், மார்ஷல் திட்டத்தின் கீழ் நெதர்லாந்துக்கான நிதி உதவியை நிறுத்துவதாக அமெரிக்கா அச்சுறுத்தியது.

இதுவே 1949-ஆம் ஆண்டு இடச்சு-இந்தோனேசிய வட்ட மேசை மாநாட்டில் (Dutch–Indonesian Round Table Conference), இடச்சு பேரரசு இந்தோனேசிய இறையாண்மையை அங்கீகரிக்க வழிவகுத்தது.

Remove ads

நியூயார்க் உடன்படிக்கை

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, காலனித்துவ ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட (Decolonisation of Asia) ஆசிய முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தோனேசியா மாறியது. இந்தோனேசிய புரட்சியின் போதும்; மற்றும் இந்தோனேசிய விடுதலைக்குப் பிறகும், இந்தோனேசியாவில் வசித்த இடச்சு குடிமக்கள் பெரும்பாலோர் நெதர்லாந்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

1962-இல் இடச்சுக்காரர்கள், தென்கிழக்கு ஆசியாவில் அவர்களின் கடைசி உடைமையாக இருந்த இடச்சு நியூ கினியை (Western New Guinea), நியூயார்க் உடன்படிக்கை (New York Agreement) விதிகளின்படி இந்தோனேசியாவிற்கு மாற்றிக் கொடுத்தனர். அதன் பின்னர், இடச்சு கிழக்கிந்தியத் தீவுகள் எனும் இடச்சு பேரரசின் கிழக்கிந்தியக் குடியேற்றம் (காலனி), புவியியல் அமைப்பில் இருந்து மறைந்து போனது.[11]

இடச்சு கிழக்கிந்திய நிறுவனம்

மேலும் காண்க

மேற்கோள்கள்

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads