கெமுனிங்-சா ஆலாம் விரைவுச்சாலை

கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் ஒரு விரைவுச்சாலை From Wikipedia, the free encyclopedia

Remove ads

கெமுனிங்-சா ஆலாம் விரைவுச்சாலை E13  (ஆங்கிலம்: Kemuning–Shah Alam Highway; மலாய்: Lebuhraya Kemuning–Shah Alam) என்பது மலேசியா, சிலாங்கூர், கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள ஒரு விரைவுச்சாலை. இதற்கு எல்கேசா (LKSA) எனும் சுருக்கப் பெயரும் உண்டு.

விரைவான உண்மைகள் Expressway 13, வழித்தடத் தகவல்கள் ...

7.3 km (4.5 mi) தொலைவு கொண்ட கெமுனிங்–சா ஆலாம் விரைவுச்சாலை, கோத்தா கெமுனிங் அருகே, E5 சா ஆலாம் விரைவுச்சாலையை (Shah Alam Expressway) கெமுனிங் சந்திப்பில் (Federal Highway Route 2 Interchange) இணைக்கிறது. பின்னர் கூட்டரசு சாலை 2-இன் (Federal Highway Route 2) வழியாக கிள்ளான் நகரம் வரைக்கும் செல்கிறது.

இதற்கு முன்பு E4  எனும் வழிக் குறியீடு வழங்கப்பட்டது, ஆனால் பின்னர் E13  என மாற்றப்பட்டது. மற்றும் அதன் பழைய E4  எனும் வழிக் குறியீடு தெற்கு கெடா விரைவுச்சாலைக்கு (South Kedah Expressway) பயன்படுத்தப் படுகிறது.

Remove ads

வரலாறு

கெமுனிங்–சா ஆலாம் விரைவுச்சாலை கட்டுமானம் 2007-இல் தொடங்கியது. இந்த விரைவுச்சாலை பெர்சியாரான் சுல்தான் (Persiaran Sultan) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விரைவுச்சாலை, சா ஆலாம் நகரத்தையும் சா ஆலாம் பிரிவு 24 வரையிலான பகுதிகளையும் உள்ளடக்கியது.

இது சா ஆலாம் மாநகராட்சி (MBSA) (Shah Alam City Council) நிர்வாக எல்லைக்குள் கட்டப்பட்டு உள்ளது. கட்டுமானங்கள் 2010-ஆம் ஆண்டின் நடுப் பகுதியில் நிறைவு அடைந்தன. 18 மே 2010-இல் இந்த விரைவுச்சாலை போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.

Remove ads

சான்றுகள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads