சா ஆலாம் மாநகராட்சி
சிலாங்கூர் மாநிலத்தின் மாநகராட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சா ஆலாம் மாநகராட்சி (மலாய்: Majlis Bandaraya Shah Alam (MBSA); ஆங்கிலம்: Shah Alam City Council) (SACC); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தின் சா ஆலாம் மாநகரம்; பெட்டாலிங் மாவட்டத்தின் வடக்குப் பகுதி; கிள்ளான் மாவட்டத்தின் கிழக்குப் பகுதி ஆகிய நகர்ப் பகுதிகளை நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும். அத்துடன், சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் கீழ் செயல்படும் ஓர் ஆணையமும் ஆகும்.
7 திசம்பர் 1978-இல், மலேசியஉள்ளாட்சி சட்டத்தின் 71-இன் கீழ் தொடங்கப்பட்டது. சிலாங்கூரின் தலைநகராக சா ஆலாம் அறிவிக்கப்பட்ட அதே காலக்கட்டத்தில் தான், சா ஆலாம் மாநகராட்சியின் தோற்றமும் அறிவிக்கப்பட்டது.[4]
இதன் தலைமையகம் சிலாங்கூர், சா ஆலாம், பெர்சியாரன் பெர்பண்டாரான் (Persiaran Perbandaran, Shah Alam) சாலையில் அமைந்துள்ளது.[4]
Remove ads
பொது
மலேசியாவில் செயல்படும் மற்ற மாநகராட்சிகளைப் போலவே இந்த சா ஆலாம் மாநகராட்சியும் நகர மேலாண்மை; நகரத் திட்டமிடல்; சா ஆலாம் மாநகரத்தின் கட்டடங்கள் கட்டுப்பாடு; பொதுச் சுகாதாரம்; கழிவு மேலாண்மை; சுற்றுச்சூழல் பாதுகாப்பு; மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பின் பொது பராமரிப்பு; சமூகப் பொருளாதார மேம்பாடு போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுத்திக் கொள்கிறது.[5]
வரலாறு
1963-ஆம் ஆண்டில் சா ஆலாம் ஒரு நகரமாக உருவாக்கப்பட்டபோது, சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகத்தின் (Selangor State Development Corporation) (PKNS) கீழ் சா ஆலாம் நகர வாரியம் (Shah Alam Town Board) நிறுவப்பட்டது. 7 டிசம்பர் 1978-இல் சா ஆலாம் நகரம், சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் சா ஆலாம் நகர வாரியம்; சா ஆலாம் நகராட்சி மன்றம் (Shah Alam Municipal Council) என தகுதி உயர்த்தப்பட்டது.
சா ஆலாம் நகராட்சி மன்றத் தலைவராக சிலாங்கூர் மாநிலத்தின் மாநிலச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1 சனவரி 1979-இல், சா ஆலாம் நகராட்சி மன்றம் 123 பணியாளர்களுடன் சா ஆலாம் பிரிவு 3-இல் உள்ள ஒரு கடைமனையியில் செயல்படத் தொடங்கியது. பின்னர் 1981-இல் பிரிவு சா ஆலாம் பிரிவு 14-இல் உள்ள நகராட்சி வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. பின்னர் 1988-இல், அதன் சொந்த 28 மாடிக் கட்டிடத்திற்கு மாறிச் சென்றது.[6]
Remove ads
மாநகராட்சியின் தலைவர்கள்
சா ஆலாம் மாநகராட்சியின் தலைவர்கள் பட்டியல்:[7]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads