பிட்கின்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிட்கின் (Pidgin) (முன்னர் கெயிம் (Gaim) என்றறியப்பட்டது) ஒரு பல் இயங்குதள இணைய உரையாடல் மென்பொருளாகும். இவை கீழ்வரும் இணைய உரையாடல் சேவைகளை ஆதரிக்கின்றது.
- யாஹூ! மெசன்ஜர்
- கூகிள் டாக்
- விண்டோஸ் லைவ் மெசன்ஜர் அல்லது பழைய எம் எஸ் என் மெசன்ஜர்
- AOL மெசன்ஜர்
- Gadu-Gadu
- ICQ (via OSCAR)
- Internet Relay Chat
- Jabber (XMPP))
- Lotus Sametime
- Novell GroupWise
- OpenNAP
- QQ, 3rdparty plugin from libqq
- SILC
- Zephyr
- Session Initiation Protocol (SIP) (தற்போது உரையாடல் மட்டும்)


கட்டற்ற மென்பொருளான கெயிம், GTK கட்டுமானத்தில் விருத்திசெய்யப்பட்டிருப்பதுடன் குனூ பொதுமக்கள் உரிமத்தின் அடிப்படையில் கிடைகின்றது. இதன் தற்போதைய பதிப்பு 1.5 ஆகும்.
தொடக்கத்தில் மார்க் ஸ்பென்சர்ரினால் யுனிக்ஸ் போன்ற இயங்குதளங்களில் மட்டும் இயங்கிய இந்த மென்பொருள் தற்போது மைக்ரோசாப்ட் விண்டோஸ், குனூ/லினக்ஸ், FreeBSD, SkyOS, Mac OS X உடன் வேறுபல இயங்குதளங்களையும் ஆதரிக்கின்றது.
Remove ads
வசதிகள்
- தத்தல்கள் (tab) மூலமாக செய்தி சாளரங்களை (window) மாற்றிக் கொள்ளலாம்.
- பல்வேறு பயனர் கணக்குகளில் ஒரே நேரத்தில் இணைந்து கொள்ளலாம். ஒரே சேவை வழங்கும் நிறுவனத்தின் பல்வேறு கணக்குகளிலும் ஒரே நேரத்தில் புகுபதியலாம்.
- புனைப்பெயர்களில் உரையாடலாம்.
- தொடர்புகளிற்குக் கீழ் மாறுபட்ட இணைய உரையாடல் கணக்கு உள்ளவர்ளை ஒழுங்கமைக்கலாம்.
- தேவையேற்படின் செய்திகளையோ உரையாடல்களையோ சேமிக்கலாம்.
- பயனர்கள் தமது இருப்பு நிலையை மாற்றும் போது அது பற்றிய அறிவிப்பை pop ups ஊடாக Buddy Pounce வசதியூடாகத் தருதல்.
- வரவிருக்கும் பதிப்புக்களில், இணையமூடான ஒளி மற்றும் ஒலியழைப்புக்களை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
- வேறு மென்பொருட்களூடாக செய்திகளை Encrypt செய்தல்.
- லினக்ஸ் இயங்குதளத்தில் பிட்கினில் தமிழை நேரடியாக உள்ளிடமுடியுமெனினும் விண்டோஸ் இயங்குதளத்தில் நேரடி வசதிகள் கிடையாது.
Remove ads
வெளியிணைப்புகள்
- கெயிம் தமிழில் - யுனிக்கோட் குறித்து வருணின் வலைப்பதிவு
- கெயிம் 1.5 - தமிழ் யுனிக்கோட் முறையில் யாகூவில் உள்ளீடு செய்ய உதவும் நீட்சி
- கெயிம் பதிவிறக்கம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads