கெலமங்கலம்

தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி From Wikipedia, the free encyclopedia

கெலமங்கலம்map
Remove ads

கெலமங்கலம் (ஆங்கிலம்:Kelamangalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

விரைவான உண்மைகள்
Remove ads

அமைவிடம்

ஒசூர் - தேன்கனிகோட்டை செல்லும் பாதையில் அமைந்த இப்பேரூராட்சிக்கு தெற்கே 60 கி.மீ. தொலைவில் கிருஷ்ணகிரி உள்ளது. கெலமங்கலத்தில் தொடருந்து நிலையம் உள்ளது. இதன் கிழக்கே ஒசூர் 16 கி.மீ.; மேற்கில் தேன்கனிகோட்டை 12 கி.மீ.; வடக்கில் பெங்களூர் 60 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

6.50 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 23 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி தளி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,098 வீடுகளும், 13,321 மக்கள்தொகையும் கொண்டது.[4]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 12.6°N 77.85°E / 12.6; 77.85 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 810 மீட்டர் (2657 அடி) உயரத்தில் இருக்கின்றது.

ஆதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads