கேஎல்சிசி நீர்வாழ் உயிரினக் காட்சியகம்

கோலாலம்பூர், கேஎல்சிசி, கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் அமைந்துள்ள நீர்வாழ் உயிரினக் காட்சிய From Wikipedia, the free encyclopedia

கேஎல்சிசி நீர்வாழ் உயிரினக் காட்சியகம்map
Remove ads

கேஎல்சிசி நீர்வாழ் உயிரினக் காட்சியகம் (மலாய்: Aquaria KLCC; ஆங்கிலம்: Aquaria KLCC; சீனம்: 吉隆坡城中城水族館) என்பது மலேசியா, கோலாலம்பூர், கேஎல்சிசி, கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் அமைந்துள்ள நீர்வாழ் உயிரினக் காட்சியகம் ஆகும்.[2]

விரைவான உண்மைகள் கேஎல்சிசி நீர்வாழ் உயிரினக் காட்சியகம் Aquaria KLCC, திறக்கப்பட்ட தேதி ...

இந்தக் காட்சியகத்தில் 90 மீட்டர் திறந்தவெளி சுரங்க நடைபாதை (Transparent Tunnel Walkway) உள்ளது.

அந்தச் சுரங்க நடைபாதை, பெருங்கடலில் வாழும் மணல் புலி சுறா மீன்கள் (Sand Tiger sharks), பெரும் திருக்கைகள் (Giant Stingrays), கடல் ஆமைகள் உட்பட 10-க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான சுறாக்களை, நேருக்கு நேர் பார்வையாளர்களின் பார்வைக்கு கொண்டு வருகிறது.[3]

Remove ads

பொது

கேஎல்சிசி நீர்வாழ் உயிரினக் காட்சியகத்தின் கட்டுமானம் 2003-இல் தொடங்கியது. ஆகஸ்டு 2005-இல் திறக்கப்பட்டது. 60,000 சதுர அடி (5,600 மீ2) பரப்பளவு கொண்ட இந்தக் காட்சியகம், 90-மீட்டர் (300 அடி) நீருக்கடியிலான சுரங்கப்பாதையையும் கொண்டுள்ளது.

கடலை நோக்கும் நீரின் பயணம்

இந்தக் காட்சியகத்தில் 250 வெவ்வேறு வகையான கடல்வாழ் உயிரினங்கள்; மற்றும் உலகம் முழுவதும் உள்ள 5,000-க்கும் மேற்பட்ட நீர் நிலவாழ் உயிரினங்களும் உள்ளன. மீன் மற்றும் ஆமை பாதுகாப்பு பற்றிய தகவல் மையங்களும் உள்ளன. இந்தக் காட்சியகத்தின் அமைப்புக் கூறு, நிலத்திலிருந்து கடலை நோக்கிய நீரின் பயணத்தை அடிப்படையாகக் கொண்டது.[4]

மூடுபனி நிறைந்த மலைப்பகுதிகளில் அந்தப் பயணம் தொடங்குகிறது. ஆறுகள் வழியாக, மழைக்காடுகள், சதுப்புநிலங்கள் வழியாக ஊடுருவிச் செல்லும் நீரின் பயணம், ஆழமான நீலக் கடலுக்குள் படர்ந்து இருக்கும் பவளப்பாறைகள் வரை சென்று முடிவடைகிறது.

Remove ads

கடல்வாழ் உயிரினங்கள்

உயிரினங்கள் வாழும் இடங்கள் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.

  • சுறா மீன்கள் - பெருங்கடல் பிரிவு
  • நன்னீர் மீன்கள் - அடர்ந்த காடுகள் பிரிவு
  • பிரன்கா மீன்கள் (Piranhas) - பரிணாம மண்டலப் பிரிவு
  • நீர்நாய்கள் - ஆறுகள் பிரிவு
  • இழுதுமீன் (Jellyfish); கடல் குதிரைகள் - கடல் நீர்வாழ் உயிரினப் பிரிவு
  • நீராளி பெரிய கணவாய் (Giant Octopus) - விசித்திரமான உயிரினப் பிரிவு

கேஎல்சிசி நீர்வாழ் உயிரினக் காட்சியகம்

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads