கோலாலம்பூர் மாநாட்டு மையம்

கோலாலம்பூர் மாநகர மையத்தில் உள்ள மாநாடு மற்றும் கண்காட்சி மையம் From Wikipedia, the free encyclopedia

கோலாலம்பூர் மாநாட்டு மையம்map
Remove ads

கோலாலம்பூர் மாநாட்டு மையம் அல்லது கேஎல்சிசி மாநாட்டு மையம் (மலாய்; Pusat Konvensyen Kuala Lumpur; ஆங்கிலம்: Kuala Lumpur Convention Centre; KL Convention Centre) என்பது மலேசியா, கோலாலம்பூர், கோலாலம்பூர் மாநகர மையத்தில் (KLCC) உள்ள மாநாடு மற்றும் கண்காட்சி மையம் ஆகும்.

விரைவான உண்மைகள் கோலாலம்பூர் மாநாட்டு மையம் Kuala Lumpur Convention Centre Pusat Konvensyen Kuala Lumpur, மாற்றுப் பெயர்கள் ...

கேஎல்சிசி ஓல்டிங்ஸ் நிறுவனம் (KLCC Holdings); மற்றும் ஏஎஸ்எம் குளோபல் (ASM Global) ஆகிய நிறுவனங்களின் கூட்டு அமைப்பான கோன்வெக்ஸ் மலேசியா நிறுவனத்தின் (Convex Malaysia Sdn Bhd) மூலமாக இந்த மாநாட்டு மையம் நிர்வாகிக்கப்படுகிறது.

Remove ads

பொது

Thumb
மாநாட்டு மையத்தின் வடகிழக்கு நுழைவாயில் பகுதி

இந்த மாநாட்டு மையம், 2015-ஆம் ஆண்டிற்கான மாநாட்டு மையங்களின் பன்னாட்டுக் கழகத்தின் (International Association of Convention Centres) (AIPC) புத்தாக்க விருதைப் பெற்றுள்ளது.[1] அத்துடன், கோவிட்-19 தொற்றுநோய் பேரிடரின் போது, ​​இந்த மையம் பொதுமக்களுக்கான ஒரு தடுப்பூசி மையமாகவும் பயன்படுத்தப்பட்டது.[2]

நவீன கட்டிடக்கலை; மற்றும் பின்நவீனத்துவ கட்டிடக்கலை கூறுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கட்டிடம்; கோலாலம்பூர் நகர மையத்தின் முதனமையான மையத்திலும் அமைந்துள்ளது.

சூன் 2005-இல் திறக்கப்பட்ட பின்னர், 31 மார்ச் 2017 வரை, இந்த மையம் 12,276 நிகழ்வுகளை நடத்தியுள்ளது. 20.9 மில்லியனுக்கும் அதிகமான பிரதிநிதிகள்; மற்றும் பார்வையாளர்களைக் கோலாலம்பூருக்கு கொண்டு வந்துள்ளது. அந்தப் பிரதிநிதிகள்; மற்றும் பார்வையாளர்களில் 7 விழுக்காட்டினர், பன்னாட்டு - ஆசியப் பிராந்தியங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

Remove ads

அமைவு

ஐந்து அடுக்கு மாடிகளைக் கொண்ட இந்த மாநாட்டுக் கண்காட்சி மையத்தில் பல்வேறு சிறிய பெரிய கண்காட்சிகள் மற்றும் மாநாடுகளை நடத்துவதற்கான போதிய அளவிலான தளவாடங்களும் உள்ளன.

மாநாட்டு மற்றும் கண்காட்சி மையத்தில் 6 பெரிய அளவிலான கண்காட்சி அரங்குகள் உள்ளன. அவை 9,710மீ² பரப்பளவைக் கொண்டவை; மேலும் அவை சிறிய பெரிய கண்காட்சிகளை நடத்துவதற்கு வாடகைக்கு விடப்படுகின்றன.[3]

முதன்மை அரங்கம்

ஆறாவது கண்காட்சி அரங்கம், மாநாட்டு மையத்திற்கு வெளியில் அமைந்துள்ளது. இந்த அரங்கம் 2,600 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டது; மற்றும் முக்கியமான விருந்து நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.[4]

முதன்மை நுழைவாயிலுக்கு மேலே அமைந்துள்ள அந்த முதன்மை அரங்கம், பெரிய அளவிலான மாநாடுகள், கருத்தரங்குகள், கலை நிகழ்ச்சிகள், கச்சேரிகள், கண்காட்சிகள்; மற்றும் பெரிய அளவிலான நிறுவனக் கூட்டங்கள் நடத்துவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

கருத்தரங்கு அரங்கம்

முதனமை அரங்கம் 3 மாடிகள் உயரம் கொண்டது; மற்றும் 3,000 பேர் அமரக்கூடிய வசதியைப் பெற்றுள்ளது. எனினும், கருத்தரங்கு அரங்கம் ஒரே மாடியில் மூன்று அடுக்குகள் கொண்டது; இந்த அரங்கில் 470 பேர் அமரலாம்; மற்றும் சிறிய கச்சேரிகள், நடுத்தர அளவிலான விரிவுரைக் கருத்தரங்குகள் போன்றவற்றை நடத்தலாம்.

பெரிய, நடுத்தர மற்றும் சிறிய அளவிலான மூன்று பெரிய மாநாட்டு அறைகளும் (மாநாட்டு அரங்குகள்) உள்ளன; மொத்தம் 1,800 பேர் அமரலாம்; மேலும் 20 இருக்கைகள் கொண்ட சில சிறிய மாநாட்டு அறைகளும் உள்ளன.

Remove ads

காட்சியகம்

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads