கேத்தரின், வேல்சு இளவரசி

From Wikipedia, the free encyclopedia

கேத்தரின், வேல்சு இளவரசி
Remove ads

கேத்தரின், வேல்ஸ் இளவரசி (Catherine, Princess of Wales), கேத்தரின் எலிசபெத் "கேட்" மிடில்டன் (Catherine Elizabeth "Kate", பிறப்பு; 9 சனவரி 1982),[2] வேல்ஸ் இளவரசர் இளவரசர் வில்லியமின் மனைவி ஆவார். அவர்களது திருமணம் 2011 ஏப்ரல் 29 அன்று வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் நடைபெற்றது.

விரைவான உண்மைகள் கேத்தரின் Catherine, பிறப்பு ...

2013 சூலை 22 இல், கேத்தரின் ஆண் குழந்தை ஒன்றுக்குத் தாயானார். இந்த முதலாவது குழந்தை கேம்பிரிட்சின் இளவரசர் ஜார்ஜ் ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் சார்லசுக்குப் பின்னர் ஆட்சிக்கு வரக்கூடிய இரண்டாவது முடிக்குரிய இளவரசர் ஆவார்.[3][4] 2015 மே 2 இல், சார்லட் என்ற இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்தார். சார்லட் ஐக்கிய இராச்சியத்திற்கு மூன்றாவது முடிக்குரியவர் ஆவார்.[5]

மிடில்டன் பெர்க்சையரில் வளர்ந்தவர். மார்ல்பரோ கல்லூரியில் பயின்று பின்னர் புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகத்திற்கு மேல்படிப்புக்குச் சென்றார். அங்குதான் 2001ஆம் ஆண்டு வேல்சு இளவரசர் வில்லியமைச் சந்தித்தார். ஒருவரையொருவர் விரும்பிய நேரத்தில் தன்னை ஊடகங்கள் பின்தொடர்ந்து தொல்லைப்படுத்துவதாக புகார் கூறினார். ஏப்ரல் 2007ஆம் ஆண்டில் ஊடகங்கள் இருவருக்குமிடையே பிளவு ஏற்பட்டு பிரிவதாக அறிவித்தன. நண்பர்களாக தங்கள் உறவைத் தொடர்ந்த இருவரும் 2007ஆம் ஆண்டிலேயே மீண்டும் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து மிடில்டன் பல அரசாங்க நிகழ்வுகளில் பங்கெடுத்துள்ளார். அவருடைய புதுப்பாங்கு உணர்வுகளுக்காக பாராட்டப்பட்டு பல "சிறப்பாக ஆடை அணிந்தவர்கள்" பட்டியல்களில் இடம் பெற்றுள்ளார்.

Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads