கே. எஸ். கோதண்டராமய்யா
தமிழக அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கே. எஸ். கோதண்டராமய்யா (EK. S. Kothandaramiah, 6 ஆகத்து 1909- 1984) கிருட்டிணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி சட்டப் பேரவையின் முன்னாள உறுப்பினர் மற்றும் தெலுங்கு அறிஞராவார்.[1]
கோதண்டராமய்யா கிருட்டிணகிரி மாவட்டத்தில் பாரந்தூர் கெலமங்கலம் சாலையில் உள்ள ஜாகிருகாப்கள்ளியில் 1909 ஆகத்து 6 ஆம் நாள் சிவராமதாஸ் இராமக்கா இணையருக்கு மகனாக பிறந்தார். கோதண்டராமய்யா ஒசூரில் பள்ளிப் படிப்பை முடித்து பெங்களூரில் முதுகலை பட்டப்படிப்பை (எம்.ஏ) முடித்து, தெலுங்கு மொழியில் புலவர் பட்டம் பெற்றார். இதன் பிறகு பாகலூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியில் சேர்ந்தார். பின் ஒசூர், வேப்பனப்பள்ளி, ஆத்தூர், சேலம் ஆகிய ஊர்களில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிந்தார். பின் பொதுவாழ்வில் ஏற்பட்ட ஆர்வத்தினால் ஆசிரிரயர் பணியை விட்டு விலகினார். 1967 ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இராஜாஜியின் சுதந்திராக் கட்சியின் சார்பில் உத்தனப்பள்ளி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின் அதே தொகுதியில் இருந்து 1971 இல் சுயேட்சையாக மீண்டும் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
Remove ads
தெலுங்கு பணிகள்
தெலுங்கு மொழி மீது தீராத பற்று கொண்ட இவர் 1959 இல் பொட்டி சிறீராமுலு பெயரில் நூலகமும் படிப்பகமும் அமைத்து, ஆந்திரத்திலிருந்து தெலுங்கு புத்தகங்களை வாங்கிவந்து படிக்க உதவினார். சென்னையில் அகில இந்திய தெலுங்கு மாநாட்டை நடத்தினார். தமிழக முதல்வர் எம். ஜி. ஆர் உதவியுடன் தமிழக அரசிடம் இலவசமாக இடம்வாங்கி ஒசூர் காமராசர் காலனியில் ஆந்திர சாம்ஸ்கிருத்திகா சமிதி என்ற தெலுங்கு அமைப்பை நிறுவினார்.[2]. அதில் பல தெலுங்கு நிகழ்ச்சிகளை நடத்தி பல தெலுங்கு அறிஞர்களை வரவழைத்து சொற்பொழிவுகளை நடத்த வைத்தார். சமிதியில் கிருஷ்ண தேவராயரின் பட்டாபிசேக ஆண்டு விழாவை ஒவ்வோராண்டும் நடத்தி வந்தார் அவர் இறந்த பின்னும் இந்த நிகழ்ச்சி சமிதியில் தொடர்ந்து நடந்துவருகிறது. இவர் கிருஷ்ண தேவராயரின் வரலாறு குறித்து புத்தகத்தின் முதல் பகுதியை எழுதி வெளியிட்டார்.[3] இவருக்கு ஆந்திர சாம்ஸ்கிருத்திகா சமிதி வளாகத்தின் முகப்பில் சிலை வைக்கப்பட்டுள்ளது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads