தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980
நலத்திட்டங்கள் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ்நாட்டின் ஏழாவது சட்டமன்றத் தேர்தல் 1980 ஆம் ஆண்டு மே மாதம் நடை பெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று, ம. கோ. இராமச்சந்திரன் (எம். ஜி. ஆர்) இரண்டாம் முறையாக தமிழகத்தின் முதல்வரானார்.[1] 1987 வரை அவரே தமிழகத்தின் முதல்வராக தொடர்ந்து பதவி வகித்தார்.
Remove ads
தொகுதிகள்
1980 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 189 பொதுத் தொகுதிகளில் இருந்தும் 45 தனித் தொகுதிகளில் இருந்தும் (தாழ்த்தப்பட்டவருக்கும், பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டவை) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[2]
கட்சிகள்
1977 தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவின் ஆட்சி மூன்றாண்டுகளில் மத்திய அரசால் கலைக்கப்பட்டது. முந்தைய தேர்தலில் எதிரணியில் இருந்த திமுகவும் இந்திரா காங்கிரசும் இத்தேர்தலில் கூட்டணி அமைத்தன. 1977 நாடாளுமன்றத் தேர்தலில் தோற்ற பிறகு இந்திரா காங்கிரசு பிளவுபட்டது.தேசிய அளவில் தேவராஜ் அர்ஸ் தலைமையில் அர்ஸ் காங்கிரசு, மாநில அளவில் குமரி ஆனந்தன் காந்தி காமராஜர் காங்கிரசு போன்ற கோஷ்டிகள் காங்கிரசில் இருந்து பிரிந்து தனிக்கட்சிகளாக இத்தேர்தலில் போட்டியிட்டன. 1977 இல் மத்தியில் ஆட்சியை பிடித்த ஜனதா பார்ட்டி இரண்டு மூன்று துண்டுகளாக பிரிந்திருந்தது. மொரார்ஜி தேசாயின் ஜனதா கட்சி, எஸ். ஆர். பொம்மையின் ஜனதா கட்சி, சரண் சிங்கின் ஜனதா கட்சி என மூன்று ஜனதா கட்சிப்பிரிவுகள் தமிழகத்தில் இருந்தன. மேற்குறிப்பிட்ட கட்சிகளைத் தவிர முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஃபார்வார்ட் ப்ளாக் போன்ற கட்சிகளும் இந்தத் தேர்தலில் போட்டியிட்டன.[3]
Remove ads
அரசியல் நிலவரம்
- 1980 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் மத்தியில் ஆண்ட சரண் சிங்கின் மதச்சார்பற்ற ஜனதா கட்சி ஆட்சி கவிழ்ந்து புதிய நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடத்தப்பட்டது.
- ஜனதா கட்சி தலைவர்களுள் ஒருவரான பிஜு பட்நாயக் அவர்கள் அதிமுக-திமுக இடையே சமரசம் ஏற்பட முயற்சிகளை மேற்கொண்டார். அதில் இந்திரா காந்தியின் இந்திரா காங்கிரசு கட்சிக்கு எதிராக எம்.ஜி.ஆரையும்-கருணாநிதியையும் ஒரே கட்சியாக திரட்ட முயன்றார்.
- ஆனால் இந்த ஒப்பந்தத்திற்க்கு எம். ஜி. ஆர் நானும் கருணாநிதியும் ஒரே கட்சியில் இணைந்தால் நான் ஆரம்பித்த அதிமுக கட்சியை அதன் தாய் கட்சியான திமுகாவில் இணைந்து செயல்படும் என்றும் அதே போல் தலைவர் பொறுப்பையும் மு. கருணாநிதி வசமே ஒப்படைக்கபடும் என்று அறிவித்தவுடன் மு. கருணாநிதி அவர்களும் தனது திமுக கட்சியில் எம். ஜி. ஆர் இணைவதால் முதலமைச்சராக அவரும் கட்சியின் தலைவராக நானும் பொறுப்பு வகிக்க தயாரான இருக்கிறேன் என்று பெருந்தன்மையாக அறிவித்தார்.
- ஆனால் திமுக-அதிமுகவை சார்ந்த அமைச்சர்கள் தான் வகித்திருந்த பதவிகள் பரிபோகும் என்ற பயத்தாளும் திமுகவில் கருணாநிதி-எம். ஜி. ஆர் மீண்டும் இணைந்தால் மிகவும் கண்டிப்பான ஆட்சியாக இருக்கும் என்பதால் அன்றைய அதிமுக அமைச்சராக இருந்த பண்ருட்டி இராமச்சந்திரன் அவர்கள் தலையீட்டால் எம். ஜி. ஆர் சுயமரியாதை சுடர் என்றும் அவர் பெரியார் வழி வந்தவர் அதனால் ஒரு போதும் தன்னை வெளியேற்றிய கட்சியான திமுகவில் இணைய மாட்டார் என்ற அறிவிப்பால் அதிமுக-திமுக ஒரே கட்சியாகும். முயற்சி தோல்வியடைந்தது.
- மீண்டும் திமுக-காங்கிரசுடனும், அதிமுக-ஜனதா கட்சி உடனும் கூட்டணி அமைத்துக் கொண்டன. 1980 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி அதிமுக-ஜனதா கட்சி கூட்டணியை வென்று பெருவாரியான நாடாளுமன்ற இடங்களை பிடித்தது. மக்களவையில் தனிப்பெரும்பான்மை பெற்று இந்திரா காந்தி மூன்றாவது முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவின் பிரதமரானார். நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியினால் உற்சாகம் கொண்ட காங்கிரஸ்-திமுக கூட்டணியினர் இதே போல சட்டமன்றத் தேர்தலிலும் எளிதில் வெல்லலாம் என்று கணக்கிட்டனர்.
- ஆனால் அப்போது இந்திரா காந்தி அவர்கள் தனது எதிர் கட்சியான ஜனதா கட்சியின் கூட்டணியில் உள்ள மாநில கட்சிகள் யாவும் மக்களுக்கு விருப்பமில்லாத ஆட்சியாக கருதி கலைக்கப்படும் என்று காரணம் காட்டி மத்தியில் உள்ள தனது அதிகார செல்வாக்கை பயன்படுத்தி கலைத்தார். அந்த ஆட்சி கலைப்பு திட்டத்தை சரியாக பயன்படுத்தி கொண்ட திமுக கட்சி தலைவர் கருணாநிதி அவர்களும் தமிழ்நாட்டிலும் ஜனதா கட்சி கூட்டணியில் இருந்த அதிமுக ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையில் இந்திரா காந்தியிடம் கருணாநிதி அவர்கள் கொரிக்கை ஏற்று தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆரின் ஆளும் கட்சியான அதிமுக அரசை கலைத்தது.
- உடனே மே 1980 இல் மு. கருணாநிதி அவர்களின் தலையீட்டால் மீண்டும் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டது.
- ஆனால் நாடாளமன்றத் தேர்தலில் அதிமுக இரண்டு இடங்களில் மட்டும் வெற்றி பெற்று பெரும் தொல்வியை தழுவியதால் எம். ஜி. ஆர் அவர்கள் என் தமிழக மக்களிடையே நியாயம் கேட்க போகிறேன் என்ற நியாயம் கேட்டு நெடும் பயணம் என்ற பிரச்சாரத்தில் தனது மூன்று வருட சாதனை திட்டங்களை மக்களிடம் சொல்லி நான் என்ன தவறு செய்தேன் ஏன் எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையான ஆட்சி கலைப்பு சோதனை என்று கேள்வியாக கேட்டு மக்களிடம் அனுதாபத்தை பெற்றார். மேலும் இந்த சட்டமன்றத் தேர்தலை ஜனநாயக முறைப்படி எதிர்கொள்ளும் விதமாக தனது அதிமுக தலைமை வகித்த கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காந்தி காமராஜ் காங்கிரசு, அர்ஸ் காங்கிரசு, ஃபார்வார்ட் ப்ளாக் ஆகிய கட்சிகள் அங்கம் வகித்த தேர்தலில் எம். ஜி. ஆர் வழக்கம் போல் வெற்றி பெற்று மக்கள் நாயகனாக மீண்டும் வென்று இரண்டாவது முறை தமிழக முதல்வர் ஆனார்.
- எதிர்கட்சியான திமுகவும் இந்திரா காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு தான் கணக்கு தப்பு கணக்காக மாறி தொற்றனர்.
- ஜனதா கட்சியின் பிரிவுகள் அனைத்தும் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டன.[4][5]
Remove ads
தேர்தல் முடிவுகள்
தேர்தல் தேதி – 28 மே 1980; மொத்தம் 61.58 % வாக்குகள் பதிவாகின.[6][7]
Remove ads
ஆட்சி அமைப்பு
அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. எம். ஜி. ஆர் மீண்டும் தமிழகத்தின் முதல்வரானார். 1987 வரை அவரே தமிழக முதல்வராகப் பணியாற்றினார்.
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
வெளியிணைப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads