கா. சு. சபரிநாதன்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கா. சு. சபரிநாதன் (K. S. Sabarinadhan) (பிறப்பு 5 செப்டம்பர் 1983) இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதியாவார். இவர் 2015 முதல் 2021 வரை கேரள சட்டமன்றத்தில் அருவிக்கரை சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
Remove ads
சொந்த வாழ்க்கை
சபரிநாதன் முன்னாள் அமைச்சரும் பேரவைத் தலைவருமான ஜி. கார்த்திகேயன் - மருத்துவர் எம். டி. சுலேகா தம்பதிக்கு 5 செப்டம்பர் 1983இல் பிறந்தார்.
இவர் 2005இல் திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரியில் மின் பொறியியலில் பட்டம் பெற்றார். அதன்பிறகு பெங்களூரிலுள்ள மைன்றீயில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் சிறிது காலம் பணியாற்றினார்.[2] 2008இல் குருகிராமின் மேலாண்மை மேம்பாட்டு நிறுவனத்தில் முதுகலை வணிக மேலாண்மையை முடித்தார். அதன்பிறகு, மும்பையிலுள்ள டாட்டா குழுமத்தில் பல வருடங்கள் பணியாற்றினார். இறுதியில் சர் ரத்தன் டாடா அறக்கட்டளையுடன் சில வருடங்கள் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்துப் பகுதிகளில் பணியாற்றினார்.[3]
Remove ads
குடும்பம்

சபரிநாதன் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான திவ்யா எஸ். ஐயர் என்பவரை மணந்தார். [4] இதன் மூலம் கேரளாவின் முதல் சட்டமன்ற உறுப்பினர் -இந்திய ஆட்சிப்பணி அதிகாரி இணை என ஆனார்.[5] இவர்களுக்கு 9 மார்ச் 2019 இல் மல்ஹர் என்ற மகன் பிறந்தார்.
அரசியல் வாழ்க்கை
2015 இல், சபரிநாதன் தனது தந்தையின் மரணத்தால் காலியாக இருந்த அருவிக்கரை தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டார். இவர் தன்னுடன் போட்டியிட்ட எம். விஜயகுமார் என்பவரை 10,128 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[6] [7][8]
2016 கேரள சட்டமன்றத் தேர்தலில், இவர் அருவிக்கரை தொகுதியிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிசம்) வேட்பாளர் ஏ. ஏ. இரசீத்தை 21,314 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[9] 2020இல், கேரள இளைஞர் காங்கிரசின் துணைத் தலைவரானார்.[10] 2021 கேரள சட்டப் பேரவைத் தேர்தலில், இவர் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிசம்) ஜி. இசுடீவனிடம் 5046 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads