ஜி. கார்த்திகேயன்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஜி. கார்த்திகேயன் (G. Karthikeyan 20 ஜனவரி 1949 - 7 மார்ச் 2015) ஓர் இந்திய அரசியல்வாதியும், கேரள சட்டமன்றத்தின் சபாநாயகரும் ஆவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாக திருவனந்தபுரத்தின் அருவிக்கரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

விரைவான உண்மைகள் ஜி. ஆர்த்திகேயன், சபாநாயகர் ( கேரள சட்டமன்றம்) ...
Remove ads

அரசியல் வாழ்க்கை

ஜி. கார்த்திகேயன் மாணவர் இயக்கங்கள் மூலம் அரசியல் வாழ்க்கையினைத் துவங்கிய பின்னர் கேரள மாணவர் ஒன்றியத்தின் தலைவராக இருந்தார். இளங்கலைச் சட்டம் பயின்றார். கேரள மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவராக பணியாற்றினார். கேரள பல்கலைக்கழகத்தின் ஆட்சிக் குழு மாணவ உறுப்பினராகவும், கேரள பல்கலைக்கழக ஒன்றிய செயலாளராகவும் இருந்தார். இவர் இளைஞர் காங்கிரசில் மாநில பொதுச் செயலாளர், மாநிலத் தலைவர் உட்பட பல்வேறு பதவிகளை வகித்தார். கேரள பிரதேச காங்கிரஸ் குழுவின் பொதுச் செயலாளராகவும் இருந்தார்.[2] அ. கு. ஆன்டனி தலைமையிலான அமைச்சகத்தில் 1995ஆம் ஆண்டில் மின்சார அமைச்சராகவும் (கேரள அரசு), 2001இல் உணவு மற்றும் குடிமை வழங்கல் துறை அமைச்சராகவும் இருந்தார்.

ஜி. கார்த்திகேயன் 1982 (திருவனந்தபுரம் வடக்கு), 1991, 1996, 2001 மற்றும் 2006 (ஆரியநாடு) மற்றும் 2011 (அருவிக்கரை) ஆகிய ஆண்டுகளில் கேரள சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011 ல் கேரள சட்டமன்ற சபாநாயகர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் கே ராதாகிருஷ்ணன் . புற்றுநோய் காரணமாக பெங்களூரில் உள்ள ஹெல்த் கேர் குளோபல் (எச்.சி.ஜி) மருத்துவமனையில், இவர் 7 மார்ச் 2015, அன்று தனது 66 வயதில் இறந்தார். 1961 இல் கே.எம். சீத்தி சாஹிப்பிற்குப் பிறகு பதவியின் போது இறந்த இரண்டாவது சபாநாயகராகவும், சட்டமன்றக் கூட்டத் தொடரில் இறந்த முதல் சபாநாயகராகவும் இருந்தார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.[3]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads