கே. ஏ. கிருஷ்ணசாமி
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கே.ஏ.கிருஷ்ணசாமி (K.A.Krishnaswamy மார்ச் 24, 1932 - மே 18, 2010) தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு அமைச்சராக பணியாற்றியவர்.
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
இவர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள கணியூரில் பிறந்தார். இவரது மனைவி பெயர் புனிதவதி. இவருக்கு அருண், முகில் என்ற இரு மகன்களும், மாங்கனி, கயல்விழி என்ற இரு மகள்களும் உள்ளனர். இவரது அண்ணன் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் கே. ஏ. மதியழகன்.
அரசியலில்
கே.ஏ.கே. என அழைக்கப்படும் கே. ஏ. கிருஷ்ணசாமி திராவிட மாணவர் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டவர். ஒருமுறை 1972 - 1978 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும், மூன்றுமுறை 1980, 1984, மற்றும் 1991ல் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றினார்.[2] [3] எம்.ஜி.ஆர், ஜெ. ஜெயலலிதா அமைச்சரவைகளில் அமைச்சராகவும் பணியாற்றினார்.
புரட்சித்தலைவர் என்ற பட்டத்தை சென்னை மெரீனா கடற்கரையில் 10 இலட்சம் அதிமுக தொண்டர்கள் முன்னிலையில் எம்.ஜி.ஆருக்கு கே. ஏ. கிருஷ்ணசாமி வழங்கினார்.
Remove ads
ஆதாரம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads