கே. கிருஷ்ணன்குட்டி

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

கே. கிருஷ்ணன்குட்டி
Remove ads

கே. கிருஷ்ணன்குட்டி (K. Krishnankutty) (பிறப்பு 13 ஆகத்து 1944) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் கேரள அரசின் தற்போதைய மின்சாரத்துறை அமைச்சரும் ஆவார். [1][2] இவர் கேரள அரசின் சிற்றூர் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் [3] முன்னாள் கேரள நீர்வளத்துறை அமைச்சரும் ஆவார். இவர் தனது அரசியல் வாழ்க்கையை இந்திய தேசிய காங்கிரசில் தொடங்கினார். 1969 ஆம் ஆண்டில் கேபிசிசி உறுப்பினராக ஜனதா தளத்தில் இணையும் வரை தொடர்ந்தார்.[4] இவர் கேரளா கூட்டுறவு இயக்கத்தின் தீவிர ஆதரவாளர் ஆவார்.[5] இவர் இதற்கு முன்பு பெருமாட்டி சேவை கூட்டுறவு வங்கியின் தலைவராகவும், பாலக்காடு மாவட்ட கூட்டுறவு வங்கி மற்றும் கேரள மாநில கூட்டுறவு வங்கியின் இயக்குனராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.[4]இவர் கேரள சட்டமன்றத்தின் உறுப்பினராக 6 ஆம், 7 ஆம், 9 ஆம் மற்றும் 14 ஆம் அவைகளின் உறுப்பினர் ஆவார்.[4] இவர் பிணறாயி விஜயனின் அமைச்சரவையில், திருவல்லா சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மேத்யூ டி. தாமசிற்குப் பிறகு அமைச்சரானார்.[6]

விரைவான உண்மைகள் கே. கிருஷ்ணன்குட்டி, மின்சாரத்துறை அமைச்சர், மரபுசாரா ஆற்றல் கிராமப்புறத் தொழில்நுட்பம், கேரள அரசு ...

இவர் கேரளாவின் மதசார்பற்ற ஜனதா தளத்தின் மாநிலத் தலைவராக இருந்தார்.[7]

இவர் குஞ்சுகுட்டி மற்றும் ஜானகி ஆகியோருக்கு பெருமாட்டியில் உள்ள எழுத்தாணியில் 1944 ஆம் ஆண்டு ஆகத்து 13 ஆம் நாள் பிறந்தார்.[8] இவர் தட்டாமங்கலத்தில் அரசு எஸ். எம். உயர்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பினை முடித்தார்.[8]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads