கே. சுரேந்திரன்

மலையாள எழுத்தாளர் (1921-1997) From Wikipedia, the free encyclopedia

கே. சுரேந்திரன்
Remove ads

கே. சுரேந்திரன் (K. Surendran, 22 பிப்ரவரி 1921 - 9 ஆகத்து 1997) என்பவர் ஒரு மலையாள புதின எழுத்தாளராவார். 1963 ஆம் ஆண்டு மாயா புதினத்துக்காக கேரள சாகித்ய அகாதமி விருதையும், 1994 ஆம் ஆண்டு குரு புதினத்துக்காக வயலார் விருதையும் பெற்றார். [1]

விரைவான உண்மைகள் கே. சுரேந்திரன், பிறப்பு ...
Remove ads

வாழ்க்கை வரலாறு

சுரேந்திரன் கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஓச்சிறையில் 1921 பிப்ரவரி 22 அன்று பிறந்தார். இவர் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றினார்; முழுநேர எழுத்தாளராக மாறவேண்டி 1965 இல் தனது வேலையைவிட்டு விலகினார். இவர் மலையாளத்தில் பத்து புதினங்கள், நான்கு நாடகங்கள் மற்றும் பல புத்தகங்களை எழுதியுள்ளார். 1963 ஆம் ஆண்டு மாயா புதினத்துக்காக கேரளச் சாகித்திய அகாதமி விருதையும், 1994 ஆம் ஆண்டு குரு புதினத்துக்காக வயலார் விருதையும் பெற்றார். 1997 ஆம் ஆண்டு இவருக்கு சாகித்ய அகாதமி பெல்லோஷிப் வழங்கப்பட்டது. சுரேந்திரன் 1997 ஆகத்து 9 அன்று இறந்தார்.[2][3]

Remove ads

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்

புதினங்கள்
Thumb
கேரள சாகித்ய அகாடமி வழங்கிய பெல்லோஷிப் சான்றிதழை எம்.டி. வாசுதேவன் நாயரிடம் கே. சுரேந்திரன் பெறுகிறார்.
  • மாயா
  • தலம்
  • ஜ்வாலா
  • காட்டுக்குரங்கு
  • சக்தி
  • பிக்ஷாம்தேஹி
  • மரணம் துர்பலம்
  • க்ஷணபிரபச்சஞ்சலம்
  • அருணா
  • சீதாயனம்
  • படகா
  • குரு
நாடகங்கள்
  • பாலி
  • அரக்கிளம்
  • பலுங்கு பத்ரம்
  • அனஸ்வரமனுஷ்யன்
மற்றவை
  • மனுஷ்யவஸ்தா
  • குமாருவின்டே பால்யம்
  • நாவல்ஸ்வரூபம்
  • சுரேந்த்ராந்தே பிரபந்தங்கள்
  • குமரன் ஆசான்
  • டால்ஸ்டாய்யுதே கதா
  • தஸ்தாயெவ்ஸ்கியுதே கதா
  • கலயும் சமன்யஜனங்களும்
  • ஜீவிதாவும் ஞானும்
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads