கே. மாயத்தேவர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கே. மாயத்தேவர் (K. Maya Thevar; 15 அக்டோபர் 1934 – 9 ஆகத்து 2022)[1] எம் ஜி ஆர் புதிதாக துவக்கிய அஇஅதிமுக சார்பாக, 1973-ஆம் ஆண்டில் நடந்த இடைத்தேர்தலில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மெட்ராஸ் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆவார். இவர் தான் அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை தேர்வு செய்தவர்.
Remove ads
இளமையும் கல்வியும்
பெரிய கருப்பத் தேவர்-பெருமாயி இணையருக்கு 15 அக்டோபர் 1935-இல் உசிலம்பட்டி அருகே டி. உச்சப்பட்டி கிராமத்தில் பிறந்த மாயத்தேவர், பள்ளிக் கல்வியை பாளையங்கோட்டை தூய சவேரியார் மேனிலைப் பள்ளியிலும், இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும், சட்டக்கல்வியை சென்னை சட்டக் கல்லூரியிலும் படித்தவர். பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகறிஞராக பணிபுரிந்தவர்.
அரசியல்
ஐந்தாவது மக்களவைக்கு, 1973-ஆம் ஆண்டில் நடந்த இடைத்தேர்தலில், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிலிருந்து இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் சார்பாக வென்றவர். பின்னர் ஆறாவது மக்களவைக்கு 1977-ஆம் ஆண்டில் மீண்டும் அதே தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக நின்று வென்றவர்.[2]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads