உசிலம்பட்டி

இது தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் நகராட்சி ஆகும். From Wikipedia, the free encyclopedia

உசிலம்பட்டிmap
Remove ads

உசிலம்பட்டி (ஆங்கிலம்:Usilampatti), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். உசிலம்பட்டி மதுரை - தேனி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற ஆனையூர் ஐராவதேஸ்வரர் மற்றும் மீனாட்சி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் அதிக பரப்பளவு கொண்ட சட்டமன்ற தொகுதி ஆகும். இந்நகரமானது நான்கு பக்கமும் மேற்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டுள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் அனைத்து மாவட்டங்களை இணைக்கும் மையப் பகுதியில் அமைந்துள்ள நகரம்.

விரைவான உண்மைகள்
Remove ads

புவியியல்

மதுரை மாவட்டத்தில், (9.9649°N 77.7885°E / 9.9649; 77.7885) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு உசிலம்பட்டி அமைந்துள்ளது.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 201 மீட்டர் (659 அடி) உயரத்தில் இருக்கின்றது.

உசிலம்பட்டி (Madurai)

மக்கள் வகைப்பாடு

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 35,219 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 17,625 ஆண்கள், 17,594 பெண்கள் ஆவார்கள். உசிலம்பட்டியில் 1000 ஆண்களுக்கு 998 பெண்கள் உள்ளனர். உசிலம்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 86.84% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 91.83%, பெண்களின் கல்வியறிவு 81.89% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09% விட சற்று கூடுதலானதே. உசிலம்பட்டி மக்கள் தொகையில் 3,427 (9.73%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 94.53% ஆக இருக்கின்றனர். அதையடுத்து கிருஸ்துவர்கள் 2.91%, இஸ்லாமியர்கள் 2.33%, என்ற விகிதத்தில் இருக்கின்றனர். உசிலம்பட்டி மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 7.94%, பழங்குடியினர் 0.01% ஆக உள்ளனர். உசிலம்பட்டியில் 9,101 வீடுகள் உள்ளன.[5]

Remove ads

ஆதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads