கே. வி. சாந்தி
இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாந்தி என்ற மேடைப் பெயரால் அறியப்பட்ட கே. வி. சாந்தி (25, சூன், 1937 - செப்டம்பர் 21, 2020) என்பவர் மலையாளம், தெலுங்கு, இந்தி, தமிழ்த் திரைப்படங்களில் நடித்த இந்திய நடிகை ஆவார். இவர் 1950களின் பிற்பகுதி, 1960கள் மற்றும் 1970களில் இந்தியத் திரைப்படங்களில் ஒரு முக்கிய முன்னணி நடிகையாகவும், நடனக் கலைஞராகவும் இருந்தார். 1956 ஆம் ஆண்டு சோரி சோரி உள்ளிட்ட பிரபலமான இந்தி படங்களில் நடித்தார்.
Remove ads
பின்னணி
இவர் கேரளத்தின் கோட்டயத்தில் உள்ள சம்கிராந்தியில் பிறந்தார், பின்னர் சென்னைக்கு குடிபெயர்ந்தார். சசிகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு சியாம் குமார் என்ற மகன் உள்ளார்.[1] மெர்ரிலேண்ட் ஸ்டுடியோவின் திரைப்படங்களின் நிரந்தர நடிகைகளில் ஒருவராக இருந்தார். இவர் 50 இக்கும் மேற்பட்ட மலையாளத் திரைப்படங்களிலும் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகியமொழிகளில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[2]
Remove ads
திரைப்படவியல்
நடித்த சில தமிழ்ப் படங்கள்
- பெண்குலத்தின் பொன் விளக்கு (1959)
- மருதநாட்டு வீரன் (1961)
- எல்லாம் உனக்காக (1961)
- ஆடிப்பெருக்கு (1962)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads