கைலாலீ மாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

கைலாலீ மாவட்டம்
Remove ads

கைலாலீ மாவட்டம் (Kailali District) (நேபாளி: कैलाली जिल्लाகேட்க), தூர மேற்கு நேபாளத்தின், தராய் சமவெளியின் சேத்தி மண்டலத்தில், மாநில எண் 7-இல் அமைந்த, நேபாளத்தின் 77 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் தங்கடி நகரம் ஆகும்.


Thumb
நேபாளத்தில் கைலாலீ மாவட்டத்தின் அமைவிடம்

கைலாலீ மாவட்டத்தின் பரப்பளவு 3,235 சதுர கிலோ மீட்டராகும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 7,75,709 ஆகும். இம்மாவட்டம் தெற்கில் இந்தியாவை எல்லையாகக் கொண்டுள்ளது.

இம்மாவட்டத்தில் உள்ள டீக்காபூர் பூங்கா (Tikapur Park) நேபாளத்தின் மிகப்பெரிய பூங்காவாகும். தங்கதி நகரத்தில் வானூர்தி அருங்காட்சியகம், பைலட் பேட் உப்ரெதியால் 2014-இல் நிறுவப்பட்டது. இம்மாவட்ட மக்களால் தாரு மொழி, நேபாள மொழி மற்றும் டோட்டி மொழிகள் பேசப்படுகிறது.

Remove ads

தட்ப வெப்பம்

மேலதிகத் தகவல்கள் நேபாளப் புவியியல்#தட்ப வெப்ப மண்டலங்கள், உயரம் ...

கிராம வளர்ச்சி மன்றங்கள் மற்றும் நகராட்சிகள்

Thumb
கைலாலீ மாவட்ட கிராம வளர்ச்சி மன்றங்கள் மற்றும் நகராட்சிகளைக் காட்டும் வரைபடம்

நகராட்சிகள்

  1. தங்கடி துணை மாநகராட்சி
  2. அத்தாரியா நகராட்சி
  3. தீக்காப்பூர் நகராட்சி
  4. லம்கி சுகா நகராட்சி
  5. கோதக்கோடி நகராட்சி
  6. பஜானி – திரிசக்தி நகராட்சி

கிராம வளர்ச்சி மன்றங்கள்

  • சசௌதி
  • பௌனியா
  • சௌமலா
  • தன்சிங்காப்பூர்
  • தோடோதாரா
  • துர்கௌலி
  • தாரகா
  • கத்தாரியா
  • கோதாவரி
  • ஹசுலியா
  • ஜானகிநகர்
  • ஜோஷிபூர்
  • கைராலா
  • கோட்டா துளசிபூர்
  • மசுரியா
  • மோகன்யால்
  • முனுவா
  • நிகாலி
  • பஹல்மன்பூர்
  • பாண்டவுன்
  • பவேரா
  • பிரதாப்பூர்
  • இரத்தினபூர்
  • சஹாஜ்பூர்
  • சுகர்கா
  • தாபாப்பூர்
  • உதசிப்பூர்
  • நாராயணன்பூர்
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads