தூரமேற்கு பிரதேசம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தூரமேற்கு பிரதேசம் (முன்னர்:மாநில எண் 7) (सुदूरपश्चिम प्रदेश), 20 செப்டம்பர் 2015 அன்று புதிதாக துவக்கப்பட்ட மாநிலமாகும். 2015 நேபாள அரசியல் அமைப்புச் சட்டத்தின் [2], பட்டியல் எண் 4-இன் படி, நிர்வாக வசதிக்காக, 75 மாவட்டங்களைக் கொண்டு புதிதாக துவக்கப்பட்ட ஏழு நேபாள மாநிலங்களின் ஒன்றாகும். [2] [3]தற்காலிகமாக இமமாநிலத்திற்கு மாநில எண் 7 என பெயரிடப்பட்டுள்ளது.[2] இம்மாநிலம் நோபாளத்தில் தூரமேற்கில் உள்ளதால், தற்போது இம்மாநிலத்தின் பெயர் தூரமேற்கு பிரதேசம் என அழைக்கப்படுகிறது.
2017 மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில், 17 சனவரி 2018 அன்று இம்மாநிலத்தின் இடைக்காலத் தலைநகரமாக தங்கடி நகரத்தை தேர்வு செய்துள்ளது.
இம்மாநில 19,539 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இதன் மக்கள் தொகை 2,552,517 ஆகும். இம்மாநிலம் ஒன்பது மாவட்டங்களைக் கொண்டது.
Remove ads
அமைவிடம்
நேபாளத்தின் தூரமேற்கில் அமைந்த இம்மாநிலத்தின் தெற்கிலும், மேற்கிலும் இந்தியாவும், கிழக்கிலும், வடக்கிலும் நேபாள மாநில எண் 6 மற்றும் திபெத் தன்னாட்சிப் பகுதி எல்லைகளாக அமைந்துள்ளது.
அரசியல்
இம்மாநிலம் மொத்தம் 53 உறுப்பினர்களைக் கொண்டது. அதில் 32 உறுப்பினர்கள் நேரடித் தேர்தலிலும், 21 விகிதாச்சாரத் தேர்தல் முறையிலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இம்மாநிலத்திலிருந்து நேபாள தேசிய சபைக்கு எட்டு உறுப்பினர்களையும், நேபாள பிரதிநிதிகள் சபைக்கு 16 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கிறது.
மாநில எண் 7-இன் மாவட்டங்கள்
மாநில எண் 7, ஒன்பது மாவட்டங்களைக் கொண்டது. அவைகள்:
மக்கள் வகைப்பாடு
தூரமேற்கு பிரதேசத்தில் சமயம்
பிறர் (0.38%)
2011-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இம்மாநில மக்கள்தொகை 25,52,517 ஆகும். இது நேபாளத்தின் மொத்த மக்கள்தொகையில் 9.63% ஆகும். மக்கள்தொகையில் ஆண்கள் 1,217,887 ஆகவும்; பெண்கள் 1,334,630 ஆகவும் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 130 மக்கள் வீதம் உள்ளனர். கடந்த 2001 - 2011 பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 1.53% ஆகவுள்ளது. பாலின விகிதம் 912 ஆண்களுக்கு, 1000 பெண்கள் வீதம் உள்ளனர். நகர மக்கள்தொகை 58.9% மற்றும் கிராமப்புற மக்கள்தொகை 41.1% ஆகவுள்ளது.[4]
Remove ads
2017 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்
இம்மாநில சட்டமன்றத்தின் மொத்தமுள்ள 53 தொகுதிகளில், 39 தொகுதிகளில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம் மற்றும் மாவோயிஸ்ட் கட்சிகள் கூட்டணி அரசு, திரிலோசன பட்டா தலமையில் அமைந்துள்ளது. 12 தொகுதிகளில் வென்ற நேபாளி காங்கிரஸ் மற்றும் 2 தொகுதிகளில் வென்ற ராஷ்டிரிய ஜனதா கட்சிகள் எதிர் கட்சிகளாக உள்ளது. இம்மாநில முதலமைச்சராக மாவோயிஸ்ட் கட்சியின் திரிலோசன பட்டாவும், ஆளுநராக மோகன்ராஜ் மல்லாவும், சட்டமன்றத் தலைவராக அர்ஜுன் பகதூர் தாபாவும் உள்ளனர்.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads