நேபாள மாநிலங்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நேபாள மாநிலங்கள் ( Provinces of Nepal) (நேபாளி: प्रदेश Pradesh) 2015 நேபாள அரசியலமைப்பு சட்டத்தின் அட்டவணை எண் 4ன் படி, நிர்வாக வசதிக்காக 20 செப்டம்பர் 2015 அன்று, 77 நேபாள மாவட்டங்களைக் கொண்டு, ஏழு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது.
ஏழு புதிய மாநிலங்கள் நிறுவப்பட்டப் பின்னர், ஐந்து வளர்ச்சி பிராந்தியங்கள் மற்றும் 14 மண்டலங்களின் நிர்வாக ஆட்சி முறை முடிவுக்கு வந்தது.
Remove ads
அரசியல்
அரசாங்கம்
நேபாள மாநிலங்களின் அன்றாட நிர்வாகத்தை மாநில முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை மேற்கொள்ளும். நேபாள அரசின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர், மாநிலங்களின் ஆளுநர்களை நியமிக்கிறார்.
மாநில சட்டமன்றங்கள்
நேபாளத்தின் மாநிலங்கள் ஓரவை கொண்ட சட்டமன்றங்கள் கொண்டுள்ளது.[1] இச்சட்டமன்றத்தின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகாலம் ஆகும்.
நேபாள மாநில சட்டமன்றங்கள் 550 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அதில் 330 (60%) சட்டமன்ற உறுப்பினர்கள் நேரடித் தேர்தல் முறையிலும், 220 (40%) சட்டமன்ற உறுப்பினர்கள், விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
மேலும் மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு மகளிருக்கு இடஒதுக்கீடு உள்ளது.[2]
நேபாள மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்ற ஒரு அரசியல் கட்சியோ அல்லது அரசியல் கட்சிகளின் கூட்டணியோ அரசு அமைக்க உரிமை உள்ளது.
Remove ads
நேபாள மாநிலங்கள்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads