கொச்சி கொண்டாட்டம்

கேரளத்தின் கொச்சியில் புத்தாண்டை ஒட்டி நடத்தப்படும் விழா கொண்டாட்டம் From Wikipedia, the free encyclopedia

கொச்சி கொண்டாட்டம்
Remove ads

கொச்சின் கார்னிவல் (Cochin Carnival) என்பது ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் கடைசி வாரத்தில் கேரளத்தின் கொச்சி நகரின் கோட்டைக் கொச்சியில் நடைபெறும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்வு ஆகும். [1] இந்த நிகழ்வு பெரும்பாலும் திசம்பர் மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களில் நடத்தப்பட்டு சனவரி முதல் நாள் முடிவடைகிறது. இது வாஸ்கோ ட காமா சதுக்கத்தில் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து அதிகாரப்பூர்வமாக துவக்கப்படுகிறது. [2]

விரைவான உண்மைகள் கொச்சின் கார்னிவல், நாள் ...

விழாவின் சிறப்பம்சமாக, புத்தாண்டு நாளன்று, யானைகள் முன்செல்ல மாபெரும் அலங்கார ஊர்வலம் நடத்தப்படும். வட இந்திய நடனங்களும் ஊர்வலத்தின் ஒரு பகுதியாக இடம்பெறுகின்றன. இது போத்துக்கீசர், குசராத்தி, பஞ்சாபி, மலையாளி, கன்னடம், அரபு, இடாச்சு, ஆங்கிலோ இந்திய பண்பாடு போன்ற பல்வேறு பண்பாடுகளின் கலவையாகும். [3]

கடற்கரை தானுந்து போட்டி, கடற்கரை உதைப்பந்து, மற்போர், குத்துச்சண்டை, மிதிவண்டி பந்தயம், புல்லட் பந்தையம், கயாக்கிங் என்னும் படகுப் போட்டி, நீச்சல் போட்டி, மாரத்தான் போன்ற பல போட்டிகள் நடத்தப்படுகின்றன. [4] கலை நிகழ்ச்சிகள், உணவு திருவிழாக்கள், வண்ணமயமான பேரணிகள், கண்காட்சிகள் போன்றவை விழாவுக்கு உற்சாகத்தை சேர்க்கின்றன. திருவிழாவின் போது ஊக்குவிக்கப்படும் முக்கிய கொள்கைகளாக பங்கேற்பு, அமைதி, முன்னேற்றம், சாகசம், சுற்றுச்சூழல் போன்றவையாக உள்ளன. குறிப்பாக கோட்டைக் கொச்சி நகரம் வெள்ளைக் காகித தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுகின்றது. அமைதியைக் குறிக்கும் அனைத்து அலங்காரங்களிலும் வெள்ளை நிறம் ஆதிக்கம் செலுத்துவது குறிப்பிடத்தக்கது. [5]

கொச்சி கொண்டாட்ட நேரத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளின் மையமாக கோட்டைக் கொச்சி உள்ளது. இது மாவட்ட சுற்றுலா மேம்பாட்டுக் குழுவால் ஊக்குவிக்கப்படுகிறது. [6]

Remove ads

வரலாறு

1984 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் அவையில் 1985 ஆம் ஆண்டை அனைத்துலக இளைஞர் ஆண்டாக அறிவிக்கும் முகமாக ஒரு பிரகடனம் கையெழுத்தானதைக் கொண்டாடும் வகையில், கொச்சியைச் சேர்ந்த மூன்று இளைஞர்களான - ஆனந்த பெலிக்ஸ் ஸ்காரியா (ஆனந்த சூர்யா), ஜார்ஜ் அகஸ்டின் துண்டிபரம்பில் (ராய்), ஆண்டனி அனுப் ஸ்காரியா (அனூப்) ஆகியோர், கோட்டை கொச்சி கடற்கரையில் ஒரு கடற்கரை திருவிழாவை நடத்த முடிவு செய்தனர். [7] பல்வேறு மன்றங்கள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த 150 இளைஞர் குழுக்கள் அவர்களுக்கு ஆதரவளித்தன. முதல் விழாவுடன் தொடர்புடைய வேறு சிலரான நிர்மல் ஜான் அகஸ்டின், ராதா கோமதி, அபுல் கலாம் ஆசாத் (ஒளிப்படக்காரர்), பின்னர் குழுவில் தீவிர உறுப்பினராயினர். மேலும் முதல் திருவிழாவின் பல படங்களை ஏகலோகம் அறகட்டளையால் காப்பகப்படுத்தயுள்ளது. [8] [9]

இந்த நிகழ்ச்சியானது 1984 ஆம் ஆண்டு திசம்பர் இரண்டாம் வாரத்தில் மிதிவண்டி பந்தயத்துடன் தொடங்கியது. சடுகுடு, கயிறு இழுத்தல், களரி, குட்டியும் கோலம் (கில்லி தண்டலை ஒத்தது), களம் வர (தரையில் வரைதல்) போன்ற பிற உள்ளூர் விளையாட்டுகளும் நடத்தப்பட்டன. நிகழ்வு 1985 சனவரி முதல் நாள் அன்று ஊர்வலத்துடன் முடிவடைந்தது. 'கார்னிவேல் கொச்சின்' என்ற பெயரில் பஞ்சவாத்தியத்துடன், யானைகள் உட்பட மாபெரும் பேரணி நடைபெற்றது. படிப்படியாக, அது இன்று கொச்சி கார்னிவல் என்று அழைக்கப்படும் வடிவத்தை எடுத்துள்ளது. [10] [11]

Remove ads

சிறப்பம்சங்கள்

பாப்பான்ஹி

முதியவரைக் குறிக்கும் பாப்பான்ஹி என்னும் மாபெரும் பொம்மையானது [12] சரியாக நள்ளிரவில் எரிக்கப்படுகிறது. அது கடந்து செல்லும் ஆண்டின் முடிவைக் குறிப்பதாகவும், புத்தாண்டை வரவேற்பதாகவும் செய்யப்படுகிறது. இது அனைத்து நோய்களையும் எரித்து புதிய துவக்கத்தைக் குறிக்கிறது. இதைத் தொடர்ந்து காலை வரை நடனம், இசையுடன் கோலாகல விருந்து நடைபெறுகிறது. இந்த வழக்கத்தின் துவக்கம் தெளிவற்றதாகவே உள்ளது. [13]

இது கோச்சி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாறுவதற்கு முன்பு, உள்ளூர் மனமகிழ் மன்றங்கள் பாப்பான்ஹி கொண்டாட்டங்களைக் கொண்டிருந்தன. இது திருவிழாவுடன் இணைந்தது கிறித்துமசு தாத்தாவை ஒத்த செவிவழிக் கதையையும் வளர்ந்துள்ளது. சிறிது காலம் கழித்து, சாண்டாவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது, இருப்பினும், பின்னர் அது மாற்றப்பட்டது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads