ஆங்கிலோ இந்தியர்கள்
இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆங்கிலோ இந்தியர்கள் (Anglo-Indians) என்பவர்கள், இந்தியத் துணைக் கண்டத்தில் வாழ்ந்த ஐரோப்பிய ஆண்களுக்கும், இந்தியத் துணைக் கண்டத்து நாட்டு பெண்களுக்கும், திருமண உறவினால் பிறந்த கலப்பின மக்கள் ஆவர்.[4][5][6][7][8]. பிரித்தானிய இந்தியாவில் அனைத்து துறைகளிலும் செல்வாக்குடன் வாழ்ந்த சிறுபான்மைச் சமூகம். இச்சமூகம் பெருநகரங்களை வாழ்விடங்களாக் கொண்டது.
ஆங்கிலோ-இந்தியர் வெள்ளையர் அல்லராயினும், ஆண்களும் பெண்களும் ஐரோப்பியரைப் போல சட்டை அணிந்து ஆங்கிலம் பேசி வந்தனர். அதனால் தமிழ்நாட்டில், ஆண்களைச் சட்டைக்காரர் என்றும் பெண்களைச் சட்டைக்காரி என்றும் குறிப்பிடும் வழக்கம் தோன்றியது.[9].
தற்போது இந்தியாவில், ஆங்கிலோ இந்திய சமூகம் அருகி வரும் சமூகமாக உள்ளது.[10][11]
Remove ads
வாழ்விடம்
நவீன ஆங்கிலோ-இந்திய சமூகம் மிகவும் சிறுபான்மை சமூகமாகும். இச்சமூக மக்கள் இந்தியா, இலங்கை, மியான்மார், வங்காளதேசம், பாக்கித்தான், சிங்கப்பூர், மலேசியா, ஆத்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை போன்ற முன்னாள் ஆங்கிலேயே காலனி நாடுகளில் வாழ்பவர்கள்.
ஆங்கிலோ-இந்தியர்கள், இந்தியாவில் தில்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, மும்பை, கோவா, விசாகப்பட்டினம், விசயவாடா, ஐதராபாத்து, கான்பூர், லக்னோ, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, போத்தனூர், கொல்லம், கோழிக்கோடு, கண்ணனூர், மைசூர், கோவா, ஆக்ரா, குர்தா ரோடு, கட்டக், போன்ற நகரங்களில் வாழ்ந்தனர்.[12]
Remove ads
மொழி
ஆங்கிலம் முதல் மொழியாகவும், இந்தியத் துணைக்கண்டத்து மொழிகளை இரண்டாம் மொழியாக அறிந்தவர்கள்.
சமயம்
ஆங்கிலோ-இந்தியர்கள், கிறித்தவ சமயத்தின் உட்பிரிவுகளான உரோமன் கத்தோலிக்கம், பாப்டிசம், மெதாடிசம், புராட்டசுடண்டு சமயங்களைப் பின்பற்றுபவர்கள்.
கலாசாரமும் பண்பாடும்
ஆங்கிலோ-இந்தியர்கள் தங்கள் வாழ்க்கை முறையை முற்றிலும் ஐரோப்பிய கலாசாரம் மற்றும் பண்பாட்டைத் தழுவி வாழ்கிறார்கள்.
தொழில்
கல்வி நிலையங்கள், இந்திய இரயில்வே துறை, அஞ்சல் துறை, சுங்கம் மற்றும் கலால் துறை, வனத்துறை போன்றவற்றில் பணி புரிகிறார்கள்.[13].மேலும் உள்நாட்டு உள்நாட்டு மக்களுக்கு ஆங்கில மொழி, மேற்கத்திய இசை மற்றும் நடனம் கற்றுத் தருகிறார்கள்[14]
இந்திய விடுதலைக்குப் பின்
இந்திய விடுதலைக்கு முன்னர் எட்டு இலட்சமாக இருந்த ஆங்கிலோ-இந்தியர்களின் மக்கட்தொகை, தற்போது 80,000–125,000 ஆக குறைந்துள்ளது. இந்திய விடுதலைக்குப் பின்னர்ப் பெரும்பாலான ஆங்கிலோ இந்தியர்கள், திருமண உறவுகள் மூலம் தங்கள் வாழும் உள்நாட்டு மக்களுடன் கலந்து விட்டனர். பலர் ஐக்கிய இராச்சியம், ஆத்திரேலியா, கனடா மற்றும் ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் குடியேறி விட்டனர்.[1][15][16]
இந்திய அரசியலில்
இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி, இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு ஆங்கிலோ-இந்திய சமுக மக்களின் இரண்டு பிரதிநிதிகளை, இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர்.[17][18][19]
தமிழ்நாட்டில்
இந்திய விடுதலைக்கு முன்னர், சென்னை மாகாண சட்ட மன்ற உறுப்பினர்களாக இரண்டு ஆங்கிலேய இந்தியர்கள், ஆளுனரால் நியமிக்கப்பட்டனர்.[20] தற்போது தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு ஒரு ஆங்கிலோ இந்திய உறுப்பினர் மட்டும் நியமனம் செய்யப்படுகிறார்.[21]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
ஆதார நூற்பட்டியல்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads