கொடிக்கால் வாலாட்டி

தெற்காசியாவில் காணப்படும் பறவை இனம் From Wikipedia, the free encyclopedia

கொடிக்கால் வாலாட்டி
Remove ads

கொடிக்கால் வாலாட்டி அல்லது வன வாலாட்டி (Forest Wagtail)(டெண்ட்ரோனாந்தசு இண்டிகசு) என்பது மோடாசிலிடே குடும்பத்தை சார்ந்த வாலாட்டி பறவை சிற்றினமாகும். இது குறிப்பாக காடுகளில் காணப்படும் வளரியல்பு உடையவை ஆகும். இதன் இனப்பெருக்கம் கிழக்கு ஆசியா, இந்தியா, இந்தோனிசியாவில் நடைபெறுகிறது.

விரைவான உண்மைகள் கொடிக்கால் வாலாட்டி, காப்பு நிலை ...
Remove ads

உடலமைப்பு

கொடிக்கால் வாலாட்டியின் உடல் நீளம் சுமார் 17 செ. மீ. ஆகும். உடலின் மேற்பகுதி இடலைப் பழுப்பு நிறத்திலும் கீழ்ப்பகுதி வெளிர் மஞ்சள் தோய்ந்த வெண் நிறத்திலும் காணப்படும். தொண்டையின் கீழ்ப்பகுதியில் பிறை வடிவிலான இரண்டு கருப்புத் திட்டுகளையும் இறக்கைகளில் காணப்படும் இரண்டு வெண்பட்டைகளையும் கொண்டு இதனை அடையாளம் காணலாம்.

உணவும் இனப்பெருக்கமும்

வன வாலட்டிகள் இனப்பெருக்கம் செய்யும் பகுதிகளாக கிழக்கு ஆசியா, கொரியாவின் சில பகுதிகள், சீனாவின் சில பகுதிகள் (கன்சு, அன்கூய், யுன்னான்) மற்றும் சைபீரியாவின் சில பகுதிகள் உள்ளன. அசாமில் இனப்பெருக்கம் செய்வதாக கூறப்படுவது ஆய்விற்குட்பட்டதாக உள்ளது. இது குளிர்காலத்தில் ஆசியாவின் வெப்பமான பகுதிகளுக்கு இடம்பெயர்கிறது மேலும் இவை அந்தமான் தீவுகள் வழியாக தென்னிந்தியா, இலங்கையை அடைவதாகக் கூறப்படுகிறது.[2] இது மாலத்தீவு, ஆத்திரேலியாவில் அலைந்து திரிந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.[3] இவை தனித்தும், சிறு சிறு குழுக்களாகவும், காடுகளில் ஓடும் சிற்றாறுகளை அடுத்துக் காணப்படுகின்றன. காட்டில் காணப்படும் புழு பூச்சிகளைப் உண்ணுகிறது.[4][2]

இதன் அசாதாரண இறகுகளும் வாழ்விடத்தையும் தவிர, வன வாலாட்டி இதன் மோட்டாசில்லா உறவினர்களிடமிருந்து வேறுபட்டது. இது வாலோடு உடம்பையும் பக்கவாட்டில் அசைக்கும் பழக்கமானது மற்ற வாலாட்டிகளிடமிருந்து (மேலும் கீழும் அசைத்தல்) வேறுபட்டது. இதனுடைய சப்பானியப் பெயரான ஜோகோயூரி-செகிரே (=பக்கவாட்டாக-ஆடும் வாலாட்டி) என்பது இந்தப் பழக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.[2] இலங்கையில், இவை அடிக்கடி மாட்டுச் சாணத்தில் புழுக்களைத் தேடுவதால், வன வாலாட்டியினை இலங்கையர்கள் கோமரிட்டா (சாணம் பரப்புபவர்) என்று அழைக்கின்றனர்.[5]

இரவில் நாணல்புதர்களிடையே கரும்புக் காடுகளிலும் பிற வாலாட்டிகளோடு சேர்ந்து தங்கும்.[6]

Thumb
வன வாலாட்டி
Thumb
வன வாலாட்டி
Remove ads

ஓசை

ஆனைமலையில் குளிர்காலத்துல் பதிவு செய்யப்பட்ட ஓசை

வன வானம்பாடி ஓர் ஒற்றை-குறிப்பு அழைப்பைக் கொண்டுள்ளது (பிங்க் பிங்க்).

படங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads