கொண்டல் இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கொண்டல் இராச்சியம் (Gondal State) இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் கொண்டல் நகரம் ஆகும். இது பம்பாய் மாகாணத்தில் இருந்த கத்தியவார் முகமையின் கீழ் இருந்தது. இது தற்கால குஜராத் மாநிலத்தின் சௌராட்டிரா தீபகற்பத்தில் ராஜ்கோட் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டிருந்தது.



Remove ads
வரலாறு
கொண்டல் இராச்சியத்தை இராஜபுத்திர குல ஜடேஜா வம்சத்தின் தாக்கூர் முதலாம் மேராமான் ஜி கும்போஜி முதலாம் மேராமான் ஜியால் 1634-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த இராச்சியத்தின் நான்காம் தலைமுறை மன்னர் நான்காம் கும்போஜி கொண்டல் இராச்சியத்தை விரிவுபடுத்தினார்.1807-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற கொண்டல் இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பிரித்தானிய இந்தியாவின் பம்பாய் மாகாணத்தில் இருந்த கத்தியவார் முகமையின் கீழ் இருந்தது. 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி இராச்சியம் 1948-ஆம் ஆண்டில் பம்பாய் மாகாணத்துடன் இணக்கப்பட்டது. 1956-இல் மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, இந்த இராச்சியம் குஜராத் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.
ஆட்சியாளர்கள்
தாக்கூர் சாகிப் பட்டம் பெற்ற ஆட்சியாள்ர்கள்
அரசப்பிரதிநிதிகள்
- 16 செப்டம்பர் 1878 – 24 ஆகஸ்டு 1884
- டபிள்யூ. ஸ்காட் W. Scott (சூன் 1882 வரை)
- ஜெயசங்கர் லால்சங்கர் (பிபரவரி 1882 வரை)
- ஹான்காக் (Hancock (டிசம்பர் 1880 – பிப்ரவரி 1881)
- நாட் (Nutt (ஆகஸ்டு 1881 – சனவரி 1882])
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads