கத்தியவார் முகமை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கத்தியவார் முகமை (Kathiawar Agency) பிரித்தானிய இந்தியாவின் முகமைகளில் ஒன்றாகும். இதன் தலைமையிடம் ராஜ்கோட் நகரம் ஆகும். இது சௌராஷ்டிரா தீபகற்பத்தில் உள்ள சுதேச சமஸ்தானங்களிடமிருந்து ஆண்டுதோறும் திறை வசூலித்து மும்பை மாகாணத்தின் ஆளுநருக்கு அனுப்பி வைப்பதுடன், சுதேச சமஸ்தானங்களின் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அனுப்ப வேண்டும்.[1]1901-ஆம் ஆண்டில் இதன் பரப்பளவு 54,084 சதுர கிலோ மீட்டர் ஆகவும், மக்கள் தொகை 23,29,196 ஆக இருந்தது.
Remove ads
வரலாறு

துணைப்படை திட்டத்தை ஏற்று பிரித்தானிய இந்தியாவின் ஆளுகையை ஏற்ற சுதேச சமஸ்தானங்களை கண்காணிக்கவும், திறை வசூலிக்கவும் கத்தியவார் முகமை செயல்பட்டது.
இம்முகமையில் 1899-1900 ஆண்டுகளில் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. உணவுப் பஞ்சம் காரணமாக 1891 - 1901 இடைப்பட்ட ஆண்டுகளில் இம்முகமையின் மக்கள் தொகை 15% வீழ்ச்சியடைந்தது.[2][3]
19 அக்டோபர் 1924 அன்று கத்தியவார் முகமையை கலைத்து விட்டு, பரோடா மற்றும் குஜராத் முகமையுடன் இணைக்கப்பட்டது.[4][5][6][7] 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், பம்பாய் மாகாணத்தில் இருந்த இந்த முகமையின் பகுதிகள், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி 1948-ஆம் ஆண்டில் சௌராஷ்டிர மாநிலத்துடன் இணக்கப்பட்டது. பின்னர் 1956-இல் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, இம்முகமையின் பகுதிகள் குஜராத் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.
Remove ads
சுதேச சமஸ்தானங்கள்
கத்தியவார் முகமையின் கீழ் பெரிதும், சிறிதுமாக 193 சுதேச சமஸ்தானங்கள் இருந்தது. அவைகளில் பிரித்தானிய இந்தியாவின் வணக்கத்திற்குரிய சுதேச சமஸ்தானங்கள்:
- பரோடா அரசு
- பவநகர் அரசு
- ஜுனாகத் அரசு
- மோர்வி இராச்சியம்
- நவநகர் இராச்சியம்
- போர்பந்தர் இராச்சியம்
- தாரங்கதாரா இராச்சியம்
- ரதன்பூர் சமஸ்தானம்
- கொண்டல் இராச்சியம்
- ஜாப்ராபாத் இராச்சியம்
- வான்கனேர் சமஸ்தானம்
- வாத்வான் இராச்சியம்
- தாரங்கதாரா இராச்சியம்
- இராஜ்கோட் இராச்சியம்
- பாலிதானா சமஸ்தானம்
- லிம்ப்டி சமஸ்தானம்
- துரோல் சமஸ்தானம்
கத்தியவார் முகமையின் மொத்த பரப்பளவு 20,882 சதுர மைல்கள் (54,080 km2) ஆகும். 1901-ஆம் ஆண்டில் மக்கள் தொகை 23,29,196 ஆகும். இதன் தலைமையிடம் ராஜ்கோட் நகரம் ஆகும். கத்தியாவார் முகமை சுதேச சமஸ்தானங்களிடமிருந்து 1911-ஆம் ஆண்டில் வசூலித்த திறை ரூபாய் 12,78,000 ஆகும். இதில் பரோடா அரசு மற்றும் ஜுனாகத் அரசுகளிடமிருந்து வசூலித்த திறை ரூபாய் 70,000 ஆகும். 1903–1904-ஆம் ஆண்டில் கத்தியவார் பகுதி துறைமுகப்பகுதியிலிருந்து ஏற்றுமதி ரூபாய் 1,300,000 ஆகவும், இறக்குமதி ரூபாய் 1,120,000 அகவும் இருந்தது.
1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி இராச்சியம் 1948-ஆம் ஆண்டில் பம்பாய் மாகாணத்துடன் இணக்கப்பட்டது. 1956-இல் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, இராச்சியம் குஜராத் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.
Remove ads
இதனையும் காண்க
- சௌராஷ்டிர மாநிலம்
- பஞ்சாப் அரசுகள் முகமை
- இராஜபுதனம் முகமை
- பரோடா மற்றும் குஜராத் முகமை
- சூரத் முகமை
- ரேவா கந்தா முகமை
- மகி கந்தா முகமை
- மத்திய இந்திய முகமை
- மால்வா முகமை
- கிழக்கிந்திய முகமை
- துணைப்படைத் திட்டம்
- சுதேச சமஸ்தானம்
- சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம்
- இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்
- தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியா
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads