கொல்கத்தா பெருநகர மேம்பாட்டுக் குழுமம்

From Wikipedia, the free encyclopedia

கொல்கத்தா பெருநகர மேம்பாட்டுக் குழுமம்
Remove ads

கொல்கத்தா பெருநகர மேம்பாட்டுக் குழுமம் (Kolkata Metropolitan Development Authority) (சுருக்கமாக:KMDA) கொல்கத்தா பெருநகரப் பகுதியை திட்டமிடுவதற்கும், மேம்பாட்டிற்குமான மேற்கு வங்க அரசின் சட்டபூர்வமான அமைப்பாகும். 1970ம் ஆண்டில் நிறுவபட்ட இந்த அமைப்பு நகர்புற வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி விவகாரங்களுக்கான துறையின் கீழ் இயங்குகிறது.

விரைவான உண்மைகள் துறை மேலோட்டம், அமைப்பு ...
Remove ads

பணிகள்

இதன் பணி பன்முகத் தன்மைகளைக் கொண்டது. கொல்கத்தா பெருநகரப் பகுதியை திட்டமிடுவதற்கும், புதிய பகுதிகளை சேர்ப்பதற்கும், பெருநகரப் பகுதியின் உட்கட்டமைப்பை பலப்படுத்துவதற்கும், தொடர்ந்த வளர்ச்சிக்காக திட்டமிடுவதற்கும், மேலும் குடிநீர், வடிகால், கழிவு மேலாண்மை போன்ற அடிப்படை சேவைகளை வழங்குகிறது. இது கொல்கத்தா பெருநகர திட்டமிடல் குழுவின் (KMPC) தொழில்நுட்ப செயலகமாகும். இந்த முக்கிய செயல்பாட்டு பகுதிகள் தவிர, பிற பொதுத்துறை துறைகள் மற்றும் முகமைகள் சார்பாக ஆலோசனை சேவைகளை வழங்குவதிலும், திட்டங்களை செயல்படுத்துவதிலும் கொல்கத்தா பெருநகர மேம்பாட்டுக் குழுமம் ஈடுபட்டுள்ளது.[1]

Remove ads

வரலாறு

இவ்வமைப்பு இந்தியக் குடியரசுத் தலைவர் பிறப்பித்த அவசரச் சட்டத்தின் கீழ் 1970ல் நிறுவப்பட்டது. மேற்கு வங்காள நகர்புறம் மற்றும் உள்ளாட்சி (திட்டமிடம் & மேம்பாடு) சட்டம், 1979 கீழ் கொல்கத்தா பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் இயக்குனரகம் 1974ம் ஆண்டில் நிறுவப்பட்டது. [2]

கொல்கத்தா பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நிர்வாகம்

கொல்கத்தா பெருநகர வளர்ச்சிக் குழுமம் 11 உறுப்பினர் மன்றத்தைக் கொண்டது. இக்குழுவில் அரசால் நியமிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் மற்றும் அரசு அதிகாரிகளும் உள்ளனர். மேற்கு வஙக நகர்புற வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி விவகாரங்களுக்கான அமைச்சர் இக்குழுவின் அலுவல்சாரா தலைவராக செயல்படுவர்.[1]

கொல்கத்தா பெருநகர குழுமப் பகுதிகள்

மேலதிகத் தகவல்கள் அதிகார வரம்பு, உள்ளாட்சி அமைப்புகள் ...
Remove ads

குறிப்பிடத்தக்க திட்டங்கள்

மேலதிகத் தகவல்கள் மேம்பாடு, இடம் ...
Remove ads

இதனையும் காண்க

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads