கொ. மா. கோதண்டம்

தமிழ் எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கொ. மா. கோதண்டம் என அறியப்படும் கொட்டுமுக்கல மாடசாமிராஜா கோதண்டம் (15 செப்டம்பர் 1938 - 4 அக்டோபர் 2025[1]) ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர் ஆவார். கவிதை, கட்டுரை, சிறுகதை, நாடகம், புதினம், உரை, ஆய்வு, மருத்துவம், தொகுப்பு ஆகிய துறைகளில் பல நூல்களை எழுதியுள்ளார்.

இவரது நீலன் கதாபாத்திரம் சிறப்பு வாய்ந்தது. இந்த நீலனைக் கொண்டு இவர் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். இந்தக் கதைகள் காடுகளைப் பற்றியும், காட்டுயுர்கள் பற்றியும் புரிந்துகொள்ள ஏற்றதாக எழுதப்பட்டவை.

இவரைப்போல காடுகள், கானுயிர்கள் குறித்தும் தமிழில் எழுதியவர்கள் இல்லை என்பதால் கோதண்டம் குறிஞ்சிச் செல்வர் என்று குறிப்பிடப்படுகிறார்.[2]

Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

கோதண்டம், 15 செப்டம்பர் 1938 அன்று கொட்டுமுக்கல மாடசாமி ராஜாவுக்கும், சீதாலட்சுமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகரைச் சேர்ந்த இவரது மனைவி ராஜேஸ்வரி இந்தியில் முதுகலைப் பட்டம் படித்தவர். 15 நூல்கள் எழுதியவர். இரு மகன்கள், குறளமுதன், இளங்கோ இருவரும் தலா இரு நூல்கள் எழுதியுள்ளனர்.

எழுத்துத் துறையில்

புதினம், சிறுகதை, நாடகம், உரை, கவிதை, கட்டுரை, ஆய்வு, மருத்துவம், தொகுப்பு முதலிய துறைகளில் 95 நூல்கள் வெளிவந்துள்ளன. இவரின் படைப்புகள் தெலுங்கு, மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், ஆங்கிலம், உருசியம், செருமனியம், மற்றும் சிங்கள மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன .

சிவசைலம் முதல் ஏற்காடு, கொடைக்கானல் மலைகளில், அடர்வனங்களில், மலைவாழ் மக்கள் குடிசைகளில், அவர்களுடன் குகைகளில், ஆற்றங்கரைகளில் தங்கி பல நாட்கள் வனங்களில் சுற்றி தாவரங்கள், அரிய மூலிகைகள், விலங்கு, பறவைகள், பற்றி ஆய்வு செய்து, அறிவியல் பூர்வமாக நூல்கள் எழுதினார்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு சிறப்பு மலரில் நாட்டுப்புற இலக்கிய ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளார். திருக்குறள் உரை, திருவள்ளுவர் இன்ப நாடகம் எழுதியவர். புதுக்கவிதையில் முத்தொள்ளாயிரம் எழுதியுள்ளார். மணிமேகலை இலக்கியத்தை நாடகமாகவும், 'மணிமேகலை' உரையும், புதுக்கவிதையில் மணிமேகலையும் எழுதியுள்ளார்.

Remove ads

விருதுகள்

இவரது முதல் நூல் 'ஆரண்ய காண்டம்' குடியரசு தலைவர் விருது பெற்றது. பல நூற்றுக்கு மேற்பட்ட பரிசுகள், விருதுகள் பெற்றுள்ளார். தமிழக அரசு விருது, இலங்கை அரசு விருதுகளை பெற்றுள்ளார். 2007 ல் மலேசிய சர்வதேச தொலைநிலைப் பல்கலைக்கழகம் இவருக்கு 'கௌரவ டாக்டர் பட்டம்' அளித்து சிறப்பித்துள்ளது.

சமூகப் பணி

இராஜபாளையம் மணிமேகலை மன்றத்தை நிறுவி அதன் தலைவராகத் தன் வாழ்நாள் இறுதிவரை செயல்பட்டார்.

நூல்கள் நாட்டுடமையாக்கம்

கொ. மா. கோதண்டம் எழுதிய நூல்கள் தமிழ்நாடு அரசால் நாட்டுடமையாக்கப்பட்டு, இவரின் மரபுரிமையாளர்களுக்கு 10 இலட்சம் ரூபாய் 2025 ஏப்ரல் 5 அன்று வழங்கப்பட்டது.[4]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads