பால சாகித்திய அகாதமி விருதுகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பால சாகித்திய அகாதமி விருது சாகித்திய அகாதமியால் தேர்ந்தெடுக்கப்பட்ட மொழிகளில், இந்திய எழுத்தாளர்களின் குழந்தைகள் இலக்கியத்தில் பங்களிப்புகளுக்கு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஐந்தாண்டுகளின் படைப்புகளைக் கொண்டு இது முடிவு செய்யப்படுகிறது.[1]
Remove ads
விருதிற்கான தகுதி வரையறைகள்
- குழந்தைகள் புத்தகம் மொழி மற்றும் இலக்கியத்திற்கான ஒரு சிறந்த பங்களிப்பாக இருக்க வேண்டும்
- குழந்தைகளுக்கான கட்டுக்கதை அல்லது கதை பொழுதுபோக்கு கருதி இருந்தால் அது தகுதி பெறும்.
தமிழ் மொழியில் விருதுகள்
- 2012-இல் கொ. மா. கோதண்டம் 'காட்டுக்குள்ளே இசைவிழா' என்ற சிறுவர் கதை நூலுக்காகப் பால சாகித்திய புரஸ்கார் விருது பெற்றார்.
- 2014-இல் இரா. நடராசன் 23 பேர்களிலிருந்து ஒருவராக இவ்விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]. விருதுபெற்ற இவரது படைப்பான “விஞ்ஞான விக்கிரமாதித்தியன் கதைகள்” விக்ரமாதித்தன்-வேதாளம் கதைகளை அறிவியலைச் சார்ந்து அமைக்கப்பட்டுள்ளது.
- 2015-ஆம் ஆண்டிற்கான விருதினை தேடல் வேட்டை என்ற கவிதைத் தொகுப்பு எழுதிய செல்லகணபதி வென்றுள்ளார்.[3]
- ஒட்டுமொத்த குழந்தைகள் இலக்கியப் பங்களிப்பை வழங்கியதற்காக 2016–ஆம் ஆண்டிற்கான பால சாகித்திய புரஸ்கார் விருதினை குழ. கதிரேசன் வென்றுள்ளார்[4]
- 2021-ஆம் ஆண்டிற்கான விருது மு. முருகேசுக்கு வழங்கப்பட்டது.[5][6]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads