கோட்டக்குப்பம்

புதுச்சேரி மாநகரத்தில் உள்ள ஒரு தமிழக நகரம் கோட்டக்குப்பம் பேரூராட்சி. From Wikipedia, the free encyclopedia

கோட்டக்குப்பம்map
Remove ads

கோட்டக்குப்பம் (Kottakuppam), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். 12 செப்டம்பர் 2021 அன்று இப்பேரூராட்சியை, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[4]

விரைவான உண்மைகள்
Remove ads

அமைவிடம்

சென்னை - பாண்டிச்சேரி வழித்தடத்தில், கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்த கோட்டக்குப்பம் நகராட்சி பாண்டிச்சேரி நகரத்தை ஒட்டி வடக்கு பகுதியில் உள்ளது. புதுவை மாநிலத்தின் புதுச்சேரி நகராட்சிக்கும் உழவர்கரை நகராட்சியை சார்ந்த காலாப்பட்டு பகுதிக்கும் நடுவில் வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ளது; மேற்கில் விழுப்புரம் 35 கி.மீ. தொலைவில் உள்ளது. கோட்டகுப்பம் நகராட்சி மிக மிக அழகான கடற்கரைகளை கொண்ட அழகான ஒரு தமிழக நகரம் ஆகும். இந்த நகரம் பெரும்பாலும் தென்னந்தோப்புகளாக காட்சி அளிக்கும். இது கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள புதுச்சேரி நகரத்தின் நுழைவாயில் ஆகும். இந்த நகராட்சியின் உட்பகுதிகள் சின்ன கோட்டக்குப்பம், இந்திரா நகர், ரஹமத் நகர், சின்ன முதலியார்சாவடி, பெரிய முதலியார்சாவடி போன்றவைகள் ஆகும். இங்கு காவல் நிலையம், பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகம், வங்கிகள் ஆகியவை அமைந்துள்ளன. மேலும் இங்குள்ள ஜாமிய மஸ்ஜித் மசூதி ஆற்காட் நவாப்பினால் 1867 கட்டப்பட்ட பழமையான மசூதி ஆகும்.[5]

Remove ads

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்நகராட்சி 7,048 வீடுகளும், 31,726 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இந்நகராட்சியின் எழுத்தறிவு 81.4% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,022 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 933 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 3,888 மற்றும் 106 ஆகவுள்ளனர்.[6]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads