கோத்தா மருடு மாவட்டம்
மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோத்தா மருடு மாவட்டம்; (மலாய்: Daerah Kota Marudu; ஆங்கிலம்: Kota Marudu District) என்பது மலேசியா, சபா மாநிலம், கூடாட் பிரிவில் உள்ள ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். கோத்தா மருடு மாவட்டத்தின் தலைநகரம் கோத்தா மருடு (Kota Marudu Town).
கோத்தா மருடு நகரம், கோத்தா கினபாலுவில் இருந்து வடக்கே 130 கி.மீ. தொலைவில்; போர்னியோவின் வடக்கு முனைக்கு அருகில் உள்ள கூடாட் நகரத்துடன் கோத்தா கினபாலுவை இணைக்கும் கூட்டாட்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
Remove ads
பொது

சபா, கூடாட் பிரிவில் உள்ள மாவட்டங்கள்:
- கோத்தா மருடு மாவட்டம் (Kota Marudu District)
- கூடாட் மாவட்டம் (Kudat District)
- பித்தாசு மாவட்டம் (Pitas District)
சொற்பிறப்பியல்
கோத்தா (Kota) என்றால் மலாய் மொழியில் கோட்டை என்று பொருள். மருடு (Marudu) எனும் சொல் பாலாங்கிகி (Balangigi) மக்களின் மொழியில் இருந்து வந்த சொல். "மைருடு" "Mairudu" அல்லது "மையுலுடு" "Mairudu" என்ற சொற்கள் ஒரே இடத்தில் அமைந்துள்ள ஓர் இடத்தைக் குறிப்பதாகும். அந்த வகையில், அந்தச் சொற்கள் ஒரு பெரிய விரிகுடாவான மருடு விரிகுடாவின் புவியியல் நிலையைக் குறிக்கின்ற சொற்களாக அமைகின்றன.
அப்போது இருந்து, "மைருடு" (Mairudu) என்ற சொல் மருடு (Marudu) என்றும்; மைலுது (Mailudu) என்றும்; மலுடு (Maludu) என்றும் மாறியது. மேற்கத்திய எழுத்தாளர்கள் பெரும்பாலும் மருடு எனும் சொல்லை மருடு, மருடோ அல்லது மலுடு (Maludu) என்று குறிப்பிட்டு வருகின்றனர்.
Remove ads
வரலாறு
1595-ஆம் ஆண்டில் ஒரு டச்சு மாலுமியால், மருடு நிலப்பகுதி முதன்முதலில் வரைபடமாக வரையப்பட்டு உள்ளது. அவர் புரூணை சுல்தானகத்தில் (Bruneian Empire) இருந்து கப்பலில் பயணம் செய்து மருடு, சுலு தீவுக்கூட்டம் (Sulu Archipelago), பலாவான் தீவு (Palawan) ஆகிய இடங்களை அடைந்தவர்.[1]
மருடுவில் அந்த டச்சு மாலுமி இருந்தபோது பாலாங்கிகி மக்களைக் கண்டு பழகினார். இந்தப் பாலாங்கிகி மக்களைக் காமுகோன் மக்கள் (Camucones) என்று அப்போதைய எசுப்பானியர்கள் அழைத்தார்கள்.[2] இந்தப் பாலாங்கிகி மக்கள் அந்தக் கட்டத்தில் புரூணை மற்றும் (சூலு சுல்தானகம்|சூலு சுல்தானகத்தின்) (Sultanate of Sulu) கடல் படைகளில் போர் வீரர்களாகச் சேவை செய்தவர்கள் ஆகும்.[3]
சரீப் உஸ்மான்
கூடாட் மாவட்டம் 1894-ஆம் ஆண்டில், சரீப் உஸ்மான் (Sharif Usman) என்ற உள்ளூர் தலைவரின் கோட்டையாக அறியப்பட்டது. அவர் சூலு சுல்தானகத்தின் ஒப்புதலின் கீழ் அந்தப் பகுதியை நிர்வகித்தார். ஆனாலும் அவர் தன் சொந்த விருப்பத்தின் பேரில் ஒரு சுதந்திரமான செயல்பாட்டின் கீழ் நிர்வாகம் செய்தார் (Independent Chiefdom).[4]
பின்னர் அவர் ஒரு கடற்கொள்ளையர் என்றும்; மற்றும் அடிமை வர்த்தகர் என்று குற்றம் சாட்டப் பட்டார். பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்தின் (British North Borneo Company) காலனித்துவ அதிகாரிகளுடன் சர்ச்சைகளில் ஈடுபட்டார்.
பின்னர் அவர் பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்தின் துருப்புக்களுடன் நடந்த ஒரு போரின் போது கொல்லப் பட்டார் மற்றும் அந்தப் பகுதியில் இருந்த அவரின் முழு கோட்டையும் அழிக்கப்பட்டது.[5]
மக்கள் தொகையியல்
2010-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கோலா பென்யூ மாவட்டத்தின் மக்கள்தொகை 66,374. இவர்களில் முக்கியமானவர்கள் டூசுன்; ருங்குசு, பஜாவு, ஓராங் சுங்கை, சீனர் இனக் குழுவினர்கள் ஆகும். இவர்களே மிகப்பெரிய இனக்குழுக்களாகவும் உள்ளனர்.
அத்துடன் அருகில் உள்ள தெற்கு பிலிப்பீன்சு பகுதியின் சுலு தீவுக்கூட்டம் (Sulu Archipelago); மற்றும் மிண்டனாவோ (Mindanao) பகுதியில் இருந்தும், கணிசமான எண்ணிக்கையில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களும் உள்ளனர்.
Remove ads
காட்சியகம்
- தான்டெக் மசூதி.
- கோத்தா மருடு பேசல் தேவாலயம்.
- புனித திரேசா கத்தோலிக்க தேவாலயம்.
- கோசன் செவன்த் டே அட்வென்டிஸ்டு தேவாலயம்.
- குரோக்கர் மலைத் தொடர்.
மேற்கோள்கள்
மேலும் படிக்க
மேலும் காண்க
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads