கோலாலம்பூர் தொடருந்து நிலையம்

From Wikipedia, the free encyclopedia

கோலாலம்பூர் தொடருந்து நிலையம்
Remove ads

கோலாலம்பூர் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Kuala Lumpur Railway Station மலாய்: Stesen Keretapi Kuala Lumpur; ஜாவி: ستيسين كريتاڤي كوالا لومڤور; சீனம்: 吉隆坡火车总站) என்பது மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். மலேசிய வரலாற்றில் பற்பல வரலாற்றுத் தடங்களைப் பதித்த முன்னோடி தொடருந்து நிலையமாக விளங்குகிறது. மலேசியாவில் அமைக்கப்பட்ட தொடருந்து நிலையங்களில் இதுவே மிகவும் புகழ்பெற்ற நிலையமாகும். தொடருந்து உலகில் ஒரு தாஜ் மகால் என இந்த நிலையம் புகழாரம் செய்யப்படுகிறது.[1][2]

விரைவான உண்மைகள் கோலாலம்பூர் Kuala Lumpur, பொது தகவல்கள் ...

1886-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த நிலையத்திற்குப் பதிலாக, 1910-இல் மீண்டும் கட்டமைக்கப்பட்டது. 1915-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. அதன் பின்னர் கோலாலம்பூரின் முதன்மைத் தொடருந்து சந்திப்பாக விளங்கியது.[3][4]

Remove ads

பொது

மலாயா தொடருந்து நிறுவனம் (Malayan Railways) மற்றும் மலாய் இராச்சியங்களின் கூட்டமைப்புத் தொடருந்து அமைப்பு (Federated Malay States Railways) ஆகியவற்றின் தலைமை அலுவலகங்கள் இந்தத் தொடருந்து நிலையத்தில் இருந்துதான் முன்பு இயங்கி வந்தன.

2001-ஆம் ஆண்டு வரை அந்த இரு நிறுவனங்களின் போக்குவரத்து அச்சு மையமாகவும் இந்த நிலையம் விளங்கியது. 2001-ஆம் ஆண்டு கோலாலம்பூர் சென்ட்ரல் உருவாக்கப்படும் வரையில் கோலாலம்பூர் தொடருந்து நிலையம் தான் தலையாயத் தொடருந்து நிலையமாகப் புகழ்பெற்று விளங்கியது.

Remove ads

கட்டிட வடிவமைப்பு

இந்தத் தொடருந்து நிலையத்தின் கட்டிட வடிவமைப்பிற்காகப் பெரிதும் அறியப் படுகின்றது; கிழக்கத்திய, மேற்கத்திய பண்பாடுகளின் கலவையாக இதன் கட்டிட அமைப்பு உள்ளது. இந்த நிலையம் இப்போது சுல்தான் இசாமுடின் (Jalan Sultan Hishamuddin) சாலையில் அமைந்துள்ளது. இந்தச் சாலையின் பழைய பெயர் விக்டர் அவெனியூ (Victory Avenue). இதே போன்ற பண்பாட்டுக் கலவையாக அமைந்துள்ள மற்ற கட்டிடங்கள் இந்த நிலையத்திற்கு அருகில் உள்ளன:[5][6]

தொடருந்து நிர்வாக கட்டிடம், மலேசியாவின் தேசியப் பள்ளிவாசல், டாயாபூமி வளாகம்; கிள்ளான் ஆற்றுக்கு மறுபுறத்தில் 400.மீ தொலைவில் பசார் செனி இலகுத் தொடருந்து நிலையம் போன்ற வளாகங்கள் உள்ளன.

கட்டிடக் கலைஞர் ஆர்தர் பெனிசன்


இந்த நிலையம் பிரித்தானியக் காலனித்துவ கட்டிடக் கலைஞர்களில் மிகவும் திறமையான கலைஞரான ஆர்தர் பெனிசன் அப்பேக் (Arthur Benison Hubback) என்பவரால் வடிவமைக்கப்பட்டது. மலேசியாவில் பல அழகிய கட்டிடங்களுக்கு மொகலாய வடிவம் கொடுப்பதில் இவர் பொறுப்பு வகித்துள்ளார். ஈப்போ தொடருந்து நிலையம் இவரின் கைவண்ணத்தில் உருவான மற்றும் ஓர் அழகியச் சின்னம் ஆகும்.

பழைய கோலாலம்பூர் தொடருந்து நிலையம், கோலாலம்பூரின் மிகவும் பிரபலமான அடையாளங்களில் ஒன்றாகும். பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்கள் கட்டப்படும் வரை, கோலாலம்பூர் தொடருந்து நிலையம், சுல்தான் அப்துல் சமாத் கட்டிடம் ஆகிய இரு இடங்களும் கோலாலம்பூர் நகரத்தில் அதிகமாகப் புகைப்படம் எடுக்கப்பட்ட இடங்களாக இருந்தன.[7]

அந்தக் காலத்தில் மூர்ஸ் - முகலாயர் - இந்தோ சரசனிக் பாணிகள் (Neo-Moorish/Mughal/Indo-Saracenic/Neo-Saracenic Style) மலாயா வட்டரத்தில் வழக்கமானவை அல்ல. இருப்பினும் கோலாலம்பூர் தொடருந்து நிலையத்தின் வடிவமைப்பில், தனித்துவமான ஆங்கிலோ - ஆசியக் கட்டிடக்கலை (Anglo-Asian Architecture) அமைப்பை ஆர்தர் பெனிசன் அப்பேக், தன் வடிவமைப்பில் இணைத்தார்.[8]

Remove ads

வரலாறு

முதல் நிலையம்

தற்போதைய கோலாலம்பூர் தொடருந்து நிலையம் கட்டப்படுவதற்கு முன்பு, ஏற்கனவே அந்தப் பகுதியில் இரண்டு நிலையங்கள் செயல்பட்டு வந்தன. கோலாலம்பூரில் பிரித்தானிய உயர் ஆணையரின் குடியிருப்புக்கு (Residence of British High Commissioner) அருகாமையில் அந்த முதல் தொடருந்து நிலையம் இருந்ததால் அந்த நிலையம், உயர் ஆணையர் நிலையம் (Resident Station) எனும் செல்லப்பெயர் பெற்று இருந்தது.

தற்போது கோலாலம்பூரில் இருக்கும் சிலாங்கூர் கிளப் (Royal Selangor Club) எனும் சிலாங்கூர் மகிழ்மன்றத்திற்கு எதிர்ப்புறத்தில் அந்த முதல் நிலையம் அமைந்து இருந்தது. அந்த இடம் தற்போது டாத்தாரான் மெர்டேக்கா (Dataran Merdeka) என்று அழைக்கப்படுகிறது. அந்த முதல் நிலையம் 1986 செப்டம்பர் 22-இல் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது.

இரண்டாவது நிலையம்

தேக்கு மரங்களாலும் நிப்பா பனை (Nipah Palm) கூரைகளாலும் கட்டப்பட்ட அந்த முதல் நிலையம் கோலாலம்பூர் நகரத்தை கிள்ளான் நகரத்துடன் முதன்முதலாக தொடருந்துகளின் வழியாக இணைத்தது. இது 1980-களில் நடந்த நிகழ்வாகும்.

இரண்டாவது நிலையம், சுல்தான் சாலை நிலையம் (Sultan Street Railway Station), 1892-இல் போச் அவென்யூ (Foch Avenue) சாலையில் கட்டப்பட்டது. அந்த போச் அவென்யூ சாலை இப்போது துன் டான் செங் லாக் சாலை (Tun Tan Cheng Lock Road) என்று அழைக்கப்படுகிறது. தற்போதைய மே வங்கி கோபுரம் (Kuala Lumpur Maybank Tower), புடுராயா பேருந்து நிலையம் (Puduraya),  AG8   SP8  பிளாசா ராக்யாட் எல்ஆர்டி நிலையங்களுக்கு (Plaza Rakyat) அருகில் கட்டப்பட்டது.

புதிய கோலாலம்பூர் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பின்னர், பழைய உயர் ஆணையர் நிலையம் இடிக்கப்பட்டது. இதற்கிடையில், சாலைப் போக்குவரத்திற்காக போச் அவென்யூ சாலையில் இருந்த தண்டவாளங்கள் அகற்றப்பட்டன. அப்போது சுல்தான் சாலை நிலையம் ஒரு சிறிய முனைய நிலையமாக மாற்றப்பட்டது. மேலும் 1960-ஆம் ஆண்டில் அந்தச் சிறிய நிலையமும் இடிக்கப்பட்டது.

காட்சியகம்

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads