கேடிஎம் கொமுட்டர்

From Wikipedia, the free encyclopedia

கேடிஎம் கொமுட்டர்
Remove ads

மலாயா பயணிகள் தொடருந்து அல்லது கேடிஎம் கொமுட்டர், (மலாய்: KTM Komuter Perkhidmatan Tren Elektrik Komuter ஆங்கிலம்: Komuter KTM Komuter); என்பது தீபகற்ப மலேசியாவில் நகரங்களுக்கு இடையிலான மின்சாரத் தொடருந்து சேவைகளை (Inter-city rail) வழங்கும் மலேசியப் போக்குவரத்து அமைப்பு ஆகும். மலாயா தொடருந்து நிறுவனம் (Keretapi Tanah Melayu Berhad) (KTMB) எனும் நிறுவனத்தினால் இந்தச் சேவை நடத்தப்படுகிறது.

விரைவான உண்மைகள் மலாயா பயணிகள் தொடருந்துKTM Komuter Commuter Rail System, பொது தகவல் ...

மலாயா பயணிகள் தொடருந்து சேவை பன்முக மின்சாரத் தொடருந்துகளை (Electric Multiple-Unit) (EMU) பயன்படுத்துகிறது. இதுவே மலேசிய தொடருந்து நிறுவனத்தால் இயக்கப்பட்ட முதலாவது மின்சாரத் தொடருந்து சேவையாகும். இதற்குப் பின்னர்தான் மலாயா பன்னகர தொடருந்து (KTM Intercity); மலாயா மின்சார தொடருந்து சேவை (KTM ETS); ஆகிய இரு சேவைகளும் பயன்பாட்டிற்கு வந்தன.

Remove ads

பொது

கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு புறநகர்ப் பகுதிகளில், உள்ளூர் தொடருந்து சேவைகளை வழங்குவதற்காக 1995-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் வடக்கு பிரிவு (Northern Sector) மற்றும் தெற்கு பிரிவு (Southern Sector) என தீபகற்ப மலேசியாவின் பிற பகுதிகளுக்கும் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டன.

150 கிலோமீட்டர் பாதை கொண்ட மத்திய மலாயா பயணிகள் தொடருந்து பிரிவு, இரு சேவைகளை வழங்குகிறது. ரவாங் நகரில் இருந்து சிரம்பான் மாநகரம் வரையிலும்; பத்துமலை பகுதியில் இருந்து கிள்ளான் துறைமுகம் வரையிலும் தினமும் கிட்டத்தட்ட 60,000 பயணிகளிக்குச் சேவை வழங்குகிறது. 2017-ஆம் ஆண்டில், மலாயா பயணிகள் தொடருந்து நிறுவனத்தின் வருமானம் RM 146.2 மில்லியன்; மொத்தம் 37.235 மில்லியன் பயணிகளை ஏற்றிச் சென்றது.[1]

உள்கட்டமைப்பு பிரச்சினைகள்

மலாயா பயணிகள் தொடருந்து திட்டத்தின் தொடக்கத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் பிரச்சினையால் பல தடைகளை எதிர்கொள்ள வேண்டி வந்தது. அப்போதைய தொடருந்து சேவைகளைப் போல் அல்லாமல், மலாயா பயணிகள் தொடருந்துகள் அனைத்தும் மின்சாரத்தில் இயங்கின. இதற்கு வெளிநாட்டில் இருந்து, குறிப்பாக இந்தியாவில் இருந்து சிறப்பு நிபுணத்துவங்கள் பயன்படுத்தப்பட்டன.

அப்போதைய சோதனைக் காலத்தின் போது மின்சாரப் பயன்பாட்டில் அடிக்கடி சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டன. ஆனால் தற்போது அந்த பிரச்சனைகள் அனைத்தும் களையப்பட்டு விட்டன; மலேசியாவில் உள்ள சிறப்பு பொது போக்குவரத்து அமைப்புகளில் மிகச் சிறப்பான ஒன்றாகப் புகழ்பெறுகிறது.

Remove ads

பயணிகள்

Thumb
மலாயா பயணிகள் தொடருந்துகளின் வழித்தடம்
Thumb
பயணிகள் தொடருந்து கிள்ளான் துறைமுக வழித்தடம்
Thumb
பயணிகள் தொடருந்து சிரம்பான் வழித்தடம்

மலேசிய போக்குவரத்து அமைச்சினால் வெளியிடப்பட்ட பயணிகள் புள்ளிவிவரங்கள்; அனைத்து பயணிகள் தொடருந்து சேவைகளுக்கானது. தனிப்பட்ட வழித்தடங்களுக்கான புள்ளிவிவரங்கள் வெளியிடப்படவில்லை. 1999-க்கு முந்தைய புள்ளி விவரங்களும் கிடைக்கவில்லை.

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, பயணிகள் ...
Remove ads

தொடருந்துகள்

தொடக்கக் கால பயணிகள் தொடருந்துகள்:

மேலதிகத் தகவல்கள் வகை, தொடருந்து ...

காட்சியகம்

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads