கௌடிய வைணவம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கௌடிய வைணவம் (Gaudiya Vaishnavism), சைதன்ய வைணவம்,[1] ஹரே கிருஷ்ணா என்ற பெயர்களில் அழைக்கப்படும் வைணவப் பிரிவை கிழக்கிந்தியாவின், வங்காளம் மற்றும் ஒடிசாவில் நிறுவியர் சைதன்ய மகாபிரபு (பொ.ஊ. 1486–1534) ஆவார். வைஷ்ணவம் என்பற்கு விஷ்ணு அல்லது கிருஷ்ணரை வழிபடுபவர்கள் என்று பொருள். கௌடிய வைஷ்ணவத்தின் தத்துவங்கள் பகவத் கீதை மற்றும் பாகவத புராணத்தை அடிப்படையாகக் கொண்டது.


முழு முதற் கடவுளான கிருஷ்ணர் மீது பக்தி செலுத்துவதே, பிறவிச்சுழற்சியிலிருந்து விடுபடுதற்கான ஒரே வழி என கௌடிய வைணவத்தின் நம்பிக்கை ஆகும்.[2]
Remove ads
அசிந்திய-பேத-அபேதம்
அசிந்திய-பேத-அபேதம் (Achintya-Bheda-Abheda) எனும் வேதாந்த தத்துவத்தை கௌடிய வைணவம் கொண்டுள்ளது. இத்தத்துவத்தின் படி, பரம்பொருளான கிருஷ்ணர் அல்லது விஷ்ணு, வேறுபட்டவன் என்றோ அல்லது வேறுபடாதவன் என்றோ அறிவது அறிவுக்கு எட்டாதது என்பதே கௌடிய வைணவ மரபின் தத்துவம்.[3][4][5]
ஐந்து தத்துவங்கள்
- பகவான் கிருஷ்ணரே சைதன்ய மகாபிரபுவாக அவதரித்துள்ளார். அவரே தலைமையானவர். (சுயம் பகவான்)
- சைதன்யபிரபுவின் முதன்மைச் சீடரான நித்தியானந்தர், பலராமரின் அவதாரமானவர்.
- அத்வைத ஆச்சாரியர், ஹரி-ஹரனின் அவதாரமாவார்.
- சைதன்யரின் மற்றொரு சீடரான கதாதரன், ராதை, லலிதா (கோபியர்) ஆகியோரின் அவதாரமாகவும் மற்றும் கிருஷ்ணரின் உள்முக சக்தி கொண்டவரும் ஆவார்.
- சீனிவாசன் கிருஷ்ணர் மீது தூய பக்தி கொண்ட பக்தர் ஆவார்.[6]
கௌடிய வைணவ அமைப்புகள்
- கௌடிய மடங்கள்
- அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads