கௌதம புத்தா நகர் மாவட்டம்

உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

கௌதம புத்தா நகர் மாவட்டம்
Remove ads

கௌதம புத்தா நகர் மாவட்டம் (Gautam Budh Nagar district, Hindi: गौतम बुद्ध नगर ज़िला, Urdu: گوتم بدھ نگر ضلع) அல்லது ஜிபி நகர், வட இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் மாவட்டமாகும். பெரும்பாலும் புறநகர்ப் பகுதிகளாலான இந்த மாவட்டம்[2] தில்லியின் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ளது. மாவட்டத் தலைநகரமாக நொய்டா விளங்குகிறது. 2011 கணக்கெடுப்பின்படி கடந்த பத்தாண்டுகளில் 51.52% மக்கள்தொகை கூடியுள்ள இந்த மாவட்டம் இந்தியாவின் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரப்பகுதிகளில் ஒன்றாக விளங்குகிறது.[3]

விரைவான உண்மைகள் கௌதம புத்தா நகர் மாவட்டம்गौतम बुद्ध नगर ज़िला گوتم بدھ نگر ضلع, மாநிலம் ...

இம்மாவட்டத்தின் நொய்டா பகுதியில் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனம் 2019-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

Remove ads

அமைவிடம்

மேற்கே அரியானா மாநிலத்திலிருந்தும் தில்லியிலிருந்தும் யமுனை ஆறு இந்த மாவட்டத்தைப் பிரிக்கிறது. வடக்கே காசியாபாத் மாவட்டமும் கிழக்கே புலந்த்ஷயர் மாவட்டமும் தெற்கில் அலிகர் மாவட்டமும் எல்லைகளாக உள்ளன.

வரலாறு

இந்த மாவடம் காசியாபாத் மற்றும் புலந்த்ஷயர் மாவட்டங்களின் சில பகுதிகளைக் கொண்டு சூன் 9, 1997ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

இதன் மொத்தப் பரப்பளவு 1354 கிமீ2ஆகும். தில்லியில் அண்மையில் இருப்பதாலும் சிறந்த கட்டமைப்புகளைக் கொண்டிருப்பதாலும் பல முதன்மையான வணிக நிறுவனங்களும் தொழிலகங்களும் இங்கு அமைந்துள்ளன. தொழிற்பேட்டை நகரங்களான நொய்டா, நொய்டா பெருநகர், தாத்ரியும் தாஜ் விரைவு நெடுஞ்சாலையை அடுத்தப் பகுதிகளும் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளன.

Remove ads

மக்கள்தொகையியல்

2011 கணக்கெடுப்பின்படி கௌதம புத்தா நகர் மாவட்டம் 1,674,714 கொண்டு,[4] roughly equal to the nation of கினி-பிசாவு நாட்டிற்கிணையாகவும் [5] அமெரிக்க மாநிலம் இடாகோவிற்கு இணையாகவும்.[6] விளங்குகிறது. 640 இந்திய மாவட்டங்களில் 294ஆம் நிலையில் உள்ளது.[4] மாவட்டத்தின் மக்கள்தொகை அடர்த்தி சதுர கிமீக்கு 1252 |ஆக உள்ளது.[4] 2001-2011 பத்தாண்டுகளில் மக்கள்தொகை 39.32 % கூடியுள்ளது.[4] இந்த மாவட்டத்தின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 852 பெண்களாக உள்ளது.[4] கல்வியறிவு விகிதம் 82.2 % ஆகும்.[4]

வெளியிணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads